Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த அசிங்கத்தை பார்த்துவிட்ட மருமகள்.. சைலன்டாக சையனைடு வைத்த மாமியார்.. உறைந்த ஊட்டி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டியில் மாமியாரின் கள்ளக்காதலை பார்த்துவிட்டதால் வெளியே சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் 2 வயது குழந்தையின் தாயான தனது மருமகளுக்கு காபியில் சயனைடு விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் விஷம் குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது கொலை என 75 நாட்களுக்கு பிறகு விசாரணையில் தெரியவந்தது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ஜவஹருல்லா (50). இவருக்கு யாஸ்மின் (47) என்ற மனைவியும், இம்ரான் (27), முக்தார் (24) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் இம்ரான் கடந்த இரு ஆண்டுகளாக ஆஷிகா பர்வீன் (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ooty illicit relationship crime

முதலில் பெற்றோர் எதிர்த்த நிலையில் பிறகு பர்வீனை ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி ஆஷிகா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனாலும் ஆஷிகாவின் உறவினர்களுக்கு அவருடைய சாவில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஷிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவர் குடித்த காபியில் சயனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இந்த விஷத்தை வாங்கிக் கொடுத்ததாக காலிஃப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அவரின் மாமியார்தான் விஷம் கலந்து ஆஷிகாவுக்கு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து மாமியார் ஆஷிப், கணவர் இம்ரான், மைத்துனர் முக்தார் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். முதலில் விசாரணை நடத்திய போது ரூ 20 லட்சம் வரதட்சணையாக கேட்ட போது ஆஷிகா கொடுக்கவில்லை என்பதால் அவரை கொன்றுவிட்டு மகனுக்கு வேறு பணக்கார இடத்தில் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்ததாக யாஸ்மின் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் துருவி துருவி கேட்ட போதுதான் விசாரணையில் பகீர் தகவல் வெளியானது. அதாவது மாமியார் யாஸ்மினுக்கு தனது உறவுக்காரரான காலிஃப்புடன் கள்ளக்காதல் இருந்துள்ளதாம். இதை பல முறை ஆஷிகா, கண்ணால் பார்த்துவிட்டாராம். இதனால் அவர் வெளியில் சொல்லிவிடப் போகிறார் என யாஸ்மின் அஞ்சியுள்ளார்.

இதனால் காலிஃப்பிடம் விஷயத்தை சொல்லியுள்ளார். அப்படியென்றால் அந்த பெண்ணை கொன்றுவிடலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். அதில் சயனைடு விஷம் வெளியே கிடைக்காது என்பதால் நகைக் கடையில் ஏதோ காரணம் சொல்லி சயனைடு விஷத்தை காிஃப் வாங்கி, யாஸ்மினுக்கு கொடுத்துள்ளார்.

அதை அவரும் மருமகள் ஆஷிகா குடிக்கும் காபியில் கலந்து கொடுத்துள்ளார். பிறகு ஆஷிகா விஷம் குடித்து இறந்தது போல் சித்தரித்துவிட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நகைக் கடையிலும் விசாரணை நடத்தப்படுகிறது. சுமார் 75 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் இறப்புக்கான காரணம் தெரியவந்துள்ளது. முன்னதாக அந்த பெண்ணின் உறவினர்களை கைது செய்யுமாறு பெண்ணின் தந்தை அப்துல் சமது, தாய் நிலாபர் நிஷா, உறவினர்கள் ஊட்டியில் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் அவர்களிடம் சமாதானம் பேசினர். பிரேத பரிசோதனை அறிக்கை இப்போதுதானே வந்தது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இந்த விவகாரத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+