Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆ.ராசா ரூட் கிளியர்.. நீலகிரியில் திமுகவிற்கு குட் நியூஸ்.. எல்.முருகன் ஏன் இப்படி முடிவு எடுத்தார்?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.

இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

BJP minister L Murugan elected for Rajya Sabha again: A Raja route clear in Nilgris seats

தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதோடு கொங்கு மாவட்டங்களில் பாஜக வெல்வது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளையும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு உள்ளார்.

இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பாஜக டாப் நிர்வாகிகளிடம் நட்டா பேசி இருக்கிறார். லோக்சபா தேர்தல் வியூகங்கள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

நட்டா: கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த நட்டா, கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். முக்கியமாக கோவை, ஈரோட்டில் வென்றே ஆக வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் தேர்தல் மீது கவனம் செலுத்துங்கள் என்று பேசி இருக்கிறார்.

கோவை கூட்டம்: அதேபோல் சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசும் போதும் கோவை, நீலகிரியில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று நட்டா கூறினார். அதே நிகழ்வில் பேசிய அண்ணாமலை கோவையில் பாஜக எம்எல்ஏ நன்றாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் நீலகிரியில் இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார். இதன் மூலம் நீலகிரியில் எல் முருகன் போட்டியிடுவது அப்போது கிட்டத்தட்ட உறுதியானது.

எல் முருகன் தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி அமைச்சராக இருக்கிறார். அவரை 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரியில் களமிறக்க வாய்ப்பு உள்ளது என்றே கடந்த சில மாதங்களாக கூறப்பட்டது. அதனால்தான் இங்கு பாஜக கவனம் செலுத்தி வந்தது. இங்கே நடந்த டீ ஊழியர்கள் போராட்டத்தில் கூட அண்ணாமலை, முருகன் கலந்து கொண்டனர். இங்கே பாஜகவிற்கு இருக்கும் வாக்கு வங்கி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

உளவுத்துறை ரிப்போர்ட்: உளவுத்துறை ரிப்போர்ட் பாஜகவிற்கு சாதகமாக இருப்பதால் நீலகிரியில் எல் முருகன் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்வாகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்

ஆ. ராசா ரூட் கிளியர்: ஏற்கனவே திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் நீலகிரி தொகுதி பற்றி சில தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதன்படி ஆ. ராசா நீலகிரி தொகுதியை விட்டு மாறும் விருப்பத்தில் இல்லை என்றும், இது தொடர்பாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கிடைத்ததும், தனக்கு ஆதரவு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு முடிவு எடுப்பார் என்றும் கூறப்பட்டது. ஒருவேளை நெகட்டிவ் முடிவு வந்தால் விசிக எம்பி திருமாவின் சிதம்பரம் தொகுதிக்கு ராசா மாற வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆ. ராசாவிற்கு சாதகமாக தற்போது எல் முருகன் மாநிலங்களவைக்கு செல்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+