நீலகிரியில் பாறைக்கு மேலே.. என்ன அது? ஒரே ஷாக்.. இப்படி ஒரு போட்டோவை பார்த்து இருக்கவே மாட்டீங்க!
நீலகிரி: நீலகிரி காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
சிங்கங்கள், சிறுத்தைகள் , புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. 7,910 சிறுத்தைகள் உள்ளன.

இந்தியாவில் பல்வேறு வகையான புலி, சிறுத்தை இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன. இந்த நிலையில் நீலகிரி காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
அதன்படி நீலகிரி காட்டுக்குள் நேற்று இரண்டு சிறுத்தைகள் ஒன்றாக அருகருகே இருந்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒரு சிறுத்தை எப்போதும் பார்க்கப்படும் சாதாரண உருவம் கொண்டது. இன்னொரு கரும் சிறுத்தை ஆகும். இதில் கரும் சிறுத்தை ஆண் சிறுத்தை ஆகும். சிவப்பு சிறுத்தை பெண் சிறுத்தை ஆகும். இவை ஜோடி சிறுத்தை என்று வனவிலங்கு வல்லுனர்கள் கூறி உள்ளனர்.காட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒடிசா: இதேபோல்தான் ஒடிசா காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்திய புலி வகைகளில் ஒன்றாக ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகள் முக்கியமானது ஆகும். இந்த புலிகள் சாதராண இளம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்து இருந்து கருப்பு நிறமாக சமீப நாட்களாக மாறி வருகிறது.
அந்த வீடியோவில் கருப்பு நிறத்தில் வினோதமாக விலங்கு ஒன்று மரத்தின் மீது சாய்ந்து இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பார்த்ததும் முதலில் கரடி போல இருக்கும் இந்த விலங்கை பார்த்து பலர் குழம்பும் அளவிற்கு வித்தியாசமாக அந்த விலங்கு உள்ளது. பார்க்கவே பயங்கரமாக, உறைய வைக்கும் அளவிற்கு இந்த விலங்கு காட்சி அளிக்கிறது. இதன் உடல் முழுக்க கோடுகளும் உள்ளன.
Mating pair of leopards 🐆🐆 Nilgiri Biosphere Reserve.
— Kishore Chandran🇮🇳 (@tweetKishorec) July 4, 2023
Pc - Pantheratigris pic.twitter.com/XmJCrgyeY2
புலி: உண்மையில் இது ஒரு புலி ஆகும். வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இது சிமிலிபால் காட்டுப்பகுதியில் ஒடிசாவில் காணப்படும் கருப்பு நிற புலி ஆகும். இதன் உடல் முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். கோடுகள் மட்டும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். சில கொடுக்கல் தங்க நிறத்திலும் காணப்படும். இது மிக மிக அரிதான வகையை சேர்ந்த புலிகள் ஆகும். இதன் செல்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
புலிகள் எண்ணிக்கை: ஆம்.. 2017, 2018 மற்றும் 2019ல் இருந்து ஒடிசாவில் பல புலிகளின் உடல்களில் இந்த நிற மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 50 முதல் 60 வருடங்களுக்கு முன்பே ஒடிசாவில் சிமிலிபால் பகுதியை சேந்த பழங்குடி மக்கள் புலிகள் நிறம் மாறுவதாக குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அதை முதலில் புலிகளை ஆராய்ச்சி செய்யும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நம்பவில்லை. ஆனால் இப்போது அவர்களின் கண்காணிப்பில் இருக்கும் புலிகளே நிறம் மாற தொடங்கி உள்ளன.
Tigers are symbol of sustainability of India’s forests…
— Susanta Nanda (@susantananda3) July 29, 2022
Sharing an interesting clip of a rare melanistic tiger marking its territory on international Tigers day.
From a Tiger Reserve poised for recovery of an isolated source population with a very unique gene pool. Kudos🙏🙏 pic.twitter.com/FiCIuO8Qj4
ஏன் இப்படி?: இதனால் அந்த புலிகள் மிகவும் வினோதமாக காட்சி அளிக்கின்றன. புலிகளின் உடலில் ஏற்பட்ட ஜீன் மாற்றம்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் உடலில் டிரான்ஸ்மெம்பரீன் அமினோபெப்டிடாஸ் க்யூ அல்லது டாக்பெப் ஆகியவற்றில் ஏற்பட்ட ஜீன் உருமாற்றம் காரணமாக இந்த வரிகள் மாற்றம் ஏற்பட்டு, அது புலிகளுக்கு புதிய நிறத்தை கொடுத்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புலிகளின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications