காதல் வளர்த்தேன்.. காதலிக்காக கஞ்சா வித்தேன்! பிப்ரவரி 14 வருதுல்ல.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்
நீலகிரி: நீலகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தான் காதலித்து வரும் பெண்ணுக்கு செலவு செய்வதற்காகவும், அவருடன் வெளியே சுற்றுவதற்காகவும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறியதோடு, கஞ்சா விற்பனையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாக கூறி காவல் துறையினரை அதிர வைத்துள்ளார்.
காதலர் தினம் வந்து விட்டது. காதலிகள் காதலர்களையும், காதலர்கள் காதலிகளையும் எப்படி கவர்வது என்று டிசைன் டிசைனாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க காதலிக்காக கஞ்சா விற்று சிக்கி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.

மேலும் அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள் போலீசார். நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை இணைக்கும் பகுதியாக இருக்கிறது. அங்குள்ள ஊட்டி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் காலத்தில் இருந்தே அங்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்காகவும் வருகிறார்கள். தொடர்ந்து மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படி வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது தான் 21 வயது கல்லூரி மாணவர் சிக்கினார்.
கஞ்சா பொட்டலங்களை பாக்கெட்டிலும் தனது பைக்கிலும் வைத்திருந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார், 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த போது சொன்ன தகவல் தான் போலீசாரை தலை சுற்ற வைத்திருக்கிறது. ஊட்டியை சேர்ந்த அந்த கல்லூரி மாணவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு மது , புகை போன்ற பழக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இளம்பெண் ஒருவரையும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனது விலை உயர்ந்த பைக்கில் அந்த பெண்ணுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். அவர்கள் பெற்றோர் கொடுக்கும் பணம் அதற்கு போதுமானதாக இல்லை. அவருக்கு போதிய வருமானமும் இல்லை, அந்த பெண்ணுடன் ஊர் சுற்றாமல் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என யோசித்தபோதுதான் அவருடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்களுடன் கரம் கோர்த்து அவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கிலோ கஞ்சாவை 20 ஆயிரத்திற்கு வாங்கி சிறிய சிறிய பொட்டலங்களாக பிரித்து 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்து வந்திருக்கிறார். இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்திருக்கிறது. அந்த பணத்தில் தனது காதலிக்கு புத்தாடைகள் செல்போன் மற்றும் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால் காவல் நிலைய ஜாமினிலேயே விடுவித்துள்ளனர். காதலுக்காக என்னென்னவோ செய்கிறார்கள்.. கஞ்சா விற்பனையுமா செய்வார்கள் என புலம்புகின்றனர் மக்கள்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications