துணிச்சலான பணி.. தீக்குள் புகுந்து மீட்ட குன்னூர் போலீஸ்- சைலேந்திர பாபு பாராட்டிய அந்த 5 பேர் யார்?
ஊட்டி: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட போலீசாரை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார். முக்கியமாக துரிதமாக செயல்பட்ட 5 போலீஸ் அதிகாரிகளை டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று முதல்நாள் பலியாகினர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் முன் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் பயணிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு 80% தீக்காயத்துடன் பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிஜிபி சைலேந்திர பாபு
இந்த நிலையில் விபத்து தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. கோவை, நீலகிரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள், கண்காளிப்பாளர்கள், பல்வேறு நிபுணர்கள், தடயவியல் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், விமானப்படை வல்லுனர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல் கண்காணிப்பாளார்
இந்த கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளார் முத்து மாணிக்கம், காவலர் சிவா, ஆய்வாளர் பிரிதிவிராஜ், துணைக்காவல் கண்காணிப்பாளர் சசிகுமார், காவலர் சிவா ஆகியோரை டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார். இவர்கள் துரிதமாக செயல்ப்பட்டதோடு, தீக்குள் புகுந்து சிக்கி இருந்தவர்களை மீட்டனர். துணிச்சலாக செயல்பட்டு தீக்குள் சிக்கி இருந்த ராணுவ அதிகாரிகளை மீட்டனர்.

குன்னூர் ஹெலிகாப்டர்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்க இந்த போலீஸ் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டது ஒருவகையில் காரணம் ஆகும். இவர்கள் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்திற்கு சென்றதன் மூலம் கேப்டன் வருண் சிங் சரியான நேரத்தில் மீட்கப்பட்டார். இதன் காரணமாக இவர்களின் தீர செயலை பாராட்டி சைலேந்திர பாபு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

விபத்து
மேலும் இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு தனியாக நடத்தும் விசாரணை குறித்தும் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Recommended Video

பாராட்டு
ஹெலிகாப்டர் விபத்தின் போது அங்கு இருந்த பொது மக்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அருகில் இருந்து விபத்தை பார்த்தவர்கள் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26 பேரிடம் இதில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications