குன்னூருக்குள் சர்ப்ரைஸ்ஸா வந்த "விருந்தாளி".. யார் பாருங்க.. இரவு நேரம் கிடுகிடுனு நடுங்கிய நீலகிரி
ஊட்டி: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. இதையடுத்து, நீலகிரி மக்கள் வலுவான கோரிக்கை ஒன்றையும் மாவட்ட நிர்வாகத்துக்கு விடுத்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம், பெரும்பாலும் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதனால் இங்கு யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் இவைகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள்ளும் நுழைந்து விடுகின்றன.
இதில் கரடிகளின் எண்ணிக்கை ஏராளம்.. இதற்கு அடுத்தபடியாக பைசன் எனப்படும் காட்டெருமைகளும் சாலைகளில் உலாவரும். ஆனால், கரடிகளின் அட்டகாசத்தைதான் தடுத்து நிறுத்த முடிவதில்லை.

குன்னூர்: குன்னூர், அருவங்காடு, ஜகதாலா போன்ற பகுதிகளுக்குள் புகுந்துவிடும் கரடிகள், அங்கிருக்கும் பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விடுகிறது. கோயில்கள் எங்காவது கண்ணில் தெரிந்தால், உடனே அந்த கோயிலுக்குள்ளும் நுழைந்து விடுகிறது கோயிலினுள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளையும் கீழே தள்ளி விடுவதுடன், அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்களையும் முழுசும் குடித்துவிட்டுதான், நடையை கட்டுகிறது.
இரவு நேரம்: கரடிகள், எண்ணெய்யை குடிக்கும் என்ற சமாச்சாரமே அப்போதுதான் அனைவருக்கும் தெரிந்தது.. இதையெல்லாம் பார்த்து ஏற்கனவே பீதியில் மக்கள் இருக்கிறார்கள். குன்னூர் அருகே உள்ள சேலாஸ் மற்றும் மேல் பாரதிநகர் இரட்டை வீடு பகுதிகளில், 2 இரண்டு மாதத்திற்கு மேலாக ஒரு கரடி சுற்றித்திரிந்தது..
வழக்கமாக நைட் நேரத்தில் மட்டுமே கரடி ஊருக்குள் வரும் என்றாலும், இந்த பகுதியில் நைட், பகல் என எந்நேரமும் சுற்றி திரிந்தது. இரவு நேரத்தில், மேல் பாரதி நகர் இரட்டைவீடு பகுதியில் பல வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதனால் பயந்துபோன ஊர்மக்கள் வனத்துறையினரிடம் பலமுறை கோரிக்கை தந்தார்கள்.. ஆனால், வனத்துறையினர் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்..
அதனால், கடந்த ஜூலை 31ம் தேதி, நேரடியாகவே கிளம்பி கலெக்டர் அம்ரித்திடம், புகார் தந்தார்கள்.. "அந்த கரடியை எப்படியாவது கூண்டு வைத்து பிடித்துவிடுங்கள் ஐயா" என்று சொன்னார்கள். இதையடுத்து, கரடியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான அனுமதியை அதிகாரிகள் பெற்றனர்.
கரடி கூண்டு: பிறகு, கடந்த 7ம் தேதி, பாரதி நகருக்குள் அதிகாரிகள் நுழைந்து, கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். ஆனால், கரடி கிடைக்கவேயில்லை.. தீவிர கண்காணிப்பில், 15 நாட்களுக்கு பிறகு அந்த கரடி சிக்கிக்கொண்டது. அப்போதுதான், மேல் பாரதி நகர் பகுதிக்கே நிம்மதி மூச்சுவிட்டது.
ஆனால், அதற்குள் இன்னொரு கரடி வந்துவிட்டதாம்.. இதனால், மீண்டும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதிக்குள்ளேயே ஒரு கரடி நுழைந்துவிட்டது. அங்கிருந்த தனியார் பள்ளியின் கேன்டீனுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து, அந்த கேட்டீனின் கதவையும் சுக்குநூறாக நொறுக்கி தள்ளிவிட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டது.
கோரிக்கை: கேன்டீனில் சாப்பிட்டது போதாமல், அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை அள்ளிக்கொண்டு, பள்ளி வாசலில் வைத்து, மிச்சத்தையும் வயிறுமுட்ட சாப்பிட்டுள்ளது.
இரவு நேரம் என்பதால், பள்ளியின் செக்யூரிட்டி அங்கே இருந்திருக்கிறார்.. கரடியை விரட்ட முடியாமல், தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.. இந்த வீடியோவை பார்த்து பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் வெலவெலத்து போய்விட்டனர்.. கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
அதைவிட முக்கியமாக, தங்களுக்காக கேன்டீனில் வைத்திருந்த, மொத்த ஸ்நாக்ஸ்ஸையும் சாப்பிட்டுவிட்ட அந்த கரடியை நினைத்து, பள்ளி குழந்தைகள் கடுங்கோபத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications