நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. குன்னூரில் ஹாஸ்டல் மாணவிகள் 21 பேருக்கு கொரோனா.. பள்ளி இழுத்து மூடல்..!

குன்னூரில் 21 பள்ளி மாணவிகளுக்கு தொற்று உறுதியாகி உள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: குன்னுாரில், 21 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது... இதையடுத்து, அப்பள்ளி மூடப்பட்டது..

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று உயர்ந்திருந்த கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது.. எனினும், நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.

இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 800 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 17 பேர், சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.. இப்போதைக்கு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமியையும் விசாரியுங்க.. உதவியாளர் மணி கைதான விவகாரம்.. செக் வைக்கும் இரா. முத்தரசன்எடப்பாடி பழனிசாமியையும் விசாரியுங்க.. உதவியாளர் மணி கைதான விவகாரம்.. செக் வைக்கும் இரா. முத்தரசன்

 சிகிச்சை

சிகிச்சை

மற்றொருபக்கம் தடுப்பூசியை செலுத்தும் பணிகளும் மும்முரமாகி வருகின்றன.. கடந்த 2 மாதங்களாகவே தொற்று கட்டுக்குள் வந்த நிலையில்தான், நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு, 9 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு, குன்னூர் பெட்போர்டு அருகே உள்ள ஆங்கில வழி மேல்நிலை பள்ளியில், 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சிகிச்சை

சிகிச்சை

அதில், பிற மாணவர்களுக்கு, பரிசோதனைக்காக மாதிரி எடுக்கப்பட்டது.. அதை தொடர்ந்து, 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதியானது. இதனால் அந்த பள்ளியை மூட வேண்டி நிலைமை வந்தது.. இதற்கு பிறகு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவிகள் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், அம்பேத்கர் நகர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 21 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது..

 பாதிப்பு

பாதிப்பு

குன்னூரில் தனியார் விடுதியில் இந்த பள்ளி மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர்... அந்த விடுதியில் 21 மாணவிகளுக்கும், ஒரு பணியாளருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது... அவர்கள் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, ஹாஸ்டல் ஊழியர்கள், பள்ளியில் உடன் படிக்கும் மாணவிகள் என 100 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா டெஸ்ட்டுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது...

 பரிசோதனை

பரிசோதனை

அந்த ஹாஸ்டலுக்கும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.. இங்கு பணியாற்றும் நபர்களுக்கும் மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தி, இவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரம் சேகரித்து, மாதிரி எடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்... இங்கு உள்ள 113 மாணவியருக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

English summary
coronavirus infection confirmed 21 Students in Coonoor School Hostel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X