ஊட்டி லாட்ஜ் ரூமில்.. களியாட்டத்தில் சிக்கிய மைனர்.. ஆன் தி வேயில் "வேலியும், பயிரும்".. அட கொடுமையே

சிறுமியை பாலியல் சீண்டல் செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டி லாட்ஜில் நடந்த கொடுமையை பார்த்துவிட்டு, நீலகிரி மலை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், கேரளாவே கொந்தளித்து போயுள்ளது.

கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயதுதான் ஆகிறது.. பிளஸ் 1 படிக்கிறார்.. இவருக்கு சோஷியல் மீடியா மூலம் ஒருவர் பழக்கமாகி உள்ளார்..

காதல் என்ற பெயரில் நெருங்கி மாணவியின் மனதை கலைத்து, ஜாலியாக ஊர் சுற்றிவர அந்த பெண்ணை அழைத்துள்ளார்..

 ஊட்டி லாட்ஜ்

ஊட்டி லாட்ஜ்

அவரும் வீட்டில் பொய் சொல்லிவிட்டு, இந்த இளைஞருடன் சுற்றியுள்ளார்.. பெண்ணை அழைத்துக் கொண்டு, ஊட்டி உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, அவரை பலாத்காரமும் செய்துள்ளார் இளைஞர்.. இறுதியில் விஷயம் அந்த பெண் வீட்டிற்கு தெரிந்துபோய், அம்பலவயல் போலீசில் இளைஞர் மீது புகார் செய்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட இளைஞரையும் போக்சோவில் கைது செய்தனர்.

 லாட்ஜ் ரூமில்..

லாட்ஜ் ரூமில்..

கடந்த 11ம் தேதி, அம்பலவயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், ஒரு பெண் போலீஸ் உள்பட 3 போலீசார் மாணவியை ஊட்டி உள்பட பலாத்காரம் நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று இது தொடர்பாக விசாரணையும் நடத்தினர். கடந்த 11-ந்தேதி அம்பலவயல் போலீசார் சிறுமியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துவதற்கு ஊட்டிக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி அழைத்துள்ளனர்... சிறுமியும் வந்தார்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபின், அம்பலவயல் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, பெண் போலீஸ் பிரஷி உட்பட 3 போலீசாரும், சிறுமியை அழைத்து கொண்டு போலீஸ் ஜீப்பில் ஊட்டிக்கு வந்திருக்கிறார்கள்..

 வேலி ஆடு

வேலி ஆடு

ஊட்டியில் இளைஞர் சிறுமியை எங்கெல்லாம் அழைத்து சென்றார்களோ, அந்த இடங்கள் உட்பட, தங்கியிருந்த லாட்ஜ் உட்பட நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு, விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து மறுபடியும் அம்பலவயல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் போலீஸ் ஜீப் ஒரு இடத்தில் திடீரென நிறுத்தப்பட்டது... அப்போது ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டரும், அந்த பெண் போலீசும், இறங்கி வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது...

 DIG கவுன்சிலிங்

DIG கவுன்சிலிங்

ஜீப்பில் சிறுமியும், சப்-இன்ஸ்பெக்டர் பாபு மட்டும் தனியாக இருந்துள்ளனர்.. அந்த நேரத்தில், சப்-இன்ஸ்பெக்டர், சிறுமியிடம் சேட்டையை ஆரம்பித்துள்ளார்.. பாலியல் தொல்லை தந்து, தொடக்கூடாத இடங்களில் தொட்டதுடன், அதனை தன்னுடைய செல்போனிலும் வீடியோ, போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டார்... இதனை அவர்களுடன் வந்த இன்ஸ்பெக்டரோ, பெண் போலீசோ கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து கண்ணூர் டிஐஜி ராகுல் நாயரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

 சஸ்பெண்டு

சஸ்பெண்டு

அந்த புகாரில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனை இன்ஸ்பெக்டர், பெண் போலீஸ் கண்டு கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி டிஐஜி, போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பாபு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான் என்பதும் வெட்ட வெளிச்சமானது.. இதையடுத்து டிஐஜி ராகுல் ஆர்.நாயர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாபுவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்...

 ரெகமண்ட்

ரெகமண்ட்

மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த போது உடன் சென்ற பெண் போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு டிஐஜி பரிந்துரை செய்துள்ளார்... போக்சோவில் கைது செய்தவரே, போக்சோவில் கைதாகும் கேவலம் எல்லாம் நம்ம ஊரில்தான் நடக்கும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+