அடுத்த பிரதமரை ஸ்டாலின் தான் தீர்மானிப்பார்! ஆனித்தரமாக அடித்துச் சொல்லும் ஆ.ராசா! அடுத்தது என்ன?
நீலகிரி: அடுத்த பிரதமரை ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆனித்தரமாக அடித்துக் கூறியிருக்கிறார்.
திராவிட மாடல் தத்துவங்களால் வட மாநிலங்களை தமிழகத்தின் பக்கம் பார்வையை திருப்பியவர் ஸ்டாலின் என ஆ.ராசா பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
உதகையில் திமுக கொடியை ஏற்றி வைத்து கட்சியினர் மத்தியில் மைக் பிடித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நீலகிரியில் ஆ.ராசா
திமுகவின் 15-வது பொதுக்குழு தேர்தலில் மீண்டும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, முதல்முறையாக நேற்று தனது சொந்த தொகுதியான நீலகிரி சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு குன்னூர், உதகை, என பல இடங்களில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் கட்சி கொடியேற்றிய ஆ.ராசா, அங்கிருந்த திமுகவினர் மத்தியில் மைக் பிடித்து பேசத் தொடங்கினார்.

யார் பிரதமர்?
வரும் 2024ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டலின் திகழ்கிறார் என்றும் திராவிட மாடல் தத்துவங்களால் வட மாநிலங்களை தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் எனவும் பேசினார். மதம், ஜாதியின் அடிப்படையில் அரசியல் செய்வதே ஆரிய மாடல் என்று விமர்சித்த அவர் சமூக நீதியும், சமத்துவமுமே திராவிட மாடல் எனக் கூறினார்.

மாதம் ரூ.1,000
தமிழக அரசின் நிதி நிலைமையை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் தேர்தலின் போது கூறியபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனவும் ஆ.ராசா உறுதியளித்தார். இதுமட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீலகிரியில் மினி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோஷ்டிப்பூசல்
இதனிடையே நீலகிரி மாவட்ட திமுகவில் கோஷ்டிப்பூசல்கள் இருந்து வந்தாலும் ஆ.ராசா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லா தரப்பினரும் கலந்து கொண்டார்கள். தமிழகம் முழுவதும் இருந்தும் அண்ணா அறிவாலயத்திற்கு வரும் பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கும் ஆ.ராசாவால் தனது சொந்த தொகுதியான நீலகிரியில் நிலவும் கோஷ்டிப்பூசலை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications