Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனைமலை காட்டையே..ஜொலிக்க வைத்த மின்மினி பூச்சி கூட்டம்.. விருதை அள்ளிய போட்டோகிராபர் ஸ்ரீராம் முரளி

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் மின்மினி பூச்சிகள் ஒருசேர ஒன்றாக ஒளி எழுப்பும் சுவாரசிய சம்பவத்தை படம் பிடித்த புகைப்பட கலைஞர் ஸ்ரீராம் முரளிக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

1965ம் வருடத்தில் இருந்து உலக வனஉயிர் புகைப்பட கலைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த வனஉயிர் புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் சிறந்த புகைப்பட கலைஞருக்கு விருதுகள் வழங்கப்படும். தேசிய வரலாற்று அருங்காட்சியகம், லண்டன் மூலம் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் வெற்றிபெறும் புகைப்படங்கள் அந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.

Firefiles luminating with synchronization in Aanai Malai forest: Photo gets famous Wild Life award for 2023

இந்த வருடம் 95 நாடுகளில் இருந்து வந்த 49,957 போட்டியாளர்களில் வெற்றியாளர்கள் பெயரை நேற்று "சவுத் கென்சிங்டனில்" நடந்த விருது வழங்கும் விழாவில் தேசிய வரலாற்று அருங்காட்சியகம் வெளியிட்டது. இந்த விருது வழங்கும் விழாவில், குதிரை லாட நண்டு ஒன்றின் புகைப்படத்தை எடுத்த லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

தமிழருக்கு விருது: இதே விழாவில் இந்தியாவின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் காடுகளில் எடுக்கப்பட்ட மின்மினி பூச்சிகளின் புகைப்படத்திற்கு "முதுகெலும்பற்ற உயிரினங்கள்" பிரிவில் விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீராம் முரளிக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. 16 நிமிடங்களுக்கு மேல் மின்மினிப் பூச்சிகளை பல ஃபோக்கல் பாய்ன்ட்கள் உதவியுடன் அவர் எடுத்த இந்த புகைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

போட்டோவின் பின்னணி: இந்த புகைப்படத்திற்கு பின் முக்கியமான பின்னணி ஒன்றும் உள்ளது. அதன்படி, வைட் என்று அழைக்கப்படும் Wild and Dark Earth (WiDE) என்று என்ஜிஓ குழுவின் இணை நிறுவனர்கள் சந்திசேகர் ரத்தினம், மதி துமிலன், ஸ்ரீதர் சீதாராமன் மற்றும் ஸ்ரீராம் முரளி ஆகியோரின் தொடர் ஆராய்ச்சி மூலம் மனம்பள்ளி காட்டில் நடந்த இந்த அரிய மின்மினி பூச்சி நிகழ்வு ஆவணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Firefiles luminating with synchronization in Aanai Malai forest: Photo gets famous Wild Life award for 2023

ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் மின்மினி பூச்சிகள் ஒன்றாக ஒளி எழுப்பிய சம்பவத்தை இவர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த காட்டில் நடக்கும் அதிசய நிகழ்வை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் எஸ் ராமசுப்ரமணியன், துணை இயக்குனர் பார்கவா தேஜா, துணை காப்பாளர் வி செல்வம் மற்றும் வைட் அமைப்பின் நிர்வாகிகள் சேர்ந்து ஆய்வு செய்தனர். வைட் என்று அழைக்கப்படும் Wild and Dark Earth (WiDE) என்று என்ஜிஓ குழு மூலம் இவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் போதுதான் மின்மினி பூச்சிகளின் இந்த கொண்டாட்ட நிகழ்வை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கேமராவில் லாங்க் எக்ஸ்போசர் போட்டு இவர்கள் இங்கே எடுத்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் தரம்.. இந்த வருடம் மட்டுமின்றி கடந்த வருடமும் எஸ் ராமசுப்ரமணியன் மற்றும் வைட் அமைப்பின் ஸ்ரீராம் முரளி ஆகியோர் இதே நிகழ்வை உழண்டி காட்டு பகுதியில் பதிவு செய்துள்ளனர்.

வைட் அமைப்பின் இணை நிறுவனர்களான, சந்திசேகர் ரத்தினம் மற்றும் ஸ்ரீராம் முரளி ஆனைமலை காட்டில் இரவு பகலாக இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அமைப்புதான் ஆனைமலை காட்டு பகுதிகளில் விலங்குகளின் வாழ்வியல், அதில் ஏற்படும் மாறுபாடுகள், அதன் பன்முகத்தன்மை, அதன் வாழ்க்கை சுழற்சி என்று அனைத்தையும் ஆய்வு செய்து வருவது.

சந்திசேகர் ரத்தினம் மற்றும் ஸ்ரீராம் முரளியின் கூற்றுப்படி.. பொதுவாக கோடைகாலத்தில் முதல் கோடை மழை பெய்ததும் இந்த மின்மினி பூச்சிகளின் முட்டைகள் மரங்களில் இருக்கும் ஈரமான பகுதிகளில் தோன்ற ஆரம்பிக்கும் . அதன்பின் லேசாக வளரும் மின்மினி பூச்சிகள் லார்வாக்களாக மாறும். அடுத்த ஒரு வருடம் இது லார்வாவாகவே இருக்கும்.

Firefiles luminating with synchronization in Aanai Malai forest: Photo gets famous Wild Life award for 2023

இவை முட்டையாக இருக்கும் போதே வெளிச்சமாக இருக்கும் தன்மை கொண்டது. அதன்பின் இது லார்வாவாக இருக்கும் போது கூட வெளிச்சத்தை வெளிப்படுத்தும். தங்களை மற்ற பூச்சிகள் கடிக்காமல் இருக்க.. எதிரிகளை பயமுறுத்தும் விதமாக இந்த வெளிச்சத்தை பயன்படுத்திக்கொள்ளும். அதாவது ஆபத்தை லைட் போட்டு விரட்டும் இந்த மின்மினி பூச்சிகள். பொதுவாக ஈரப்பதமான இடங்களில் வளரும் இந்த மின்மினி பூச்சி லார்வாக்கள் அங்கே இருக்கும் சிறு சிறு புழு, பூச்சிகளை தின்று வளரும், என்கிறார் வைட் இணை நிறுவனர் முரளி.

சரியாக ஒரு வருடம் கழித்து இந்த மின்மினி பூச்சிகள் முழுமையாக வளர்ந்து பறக்க தொடங்கும். இவை பறக்க தொடங்கியதும்.. அது இணையை தேட தொடங்கும். ஆபத்தில் உதவிய அதே லைட்தான் மின்மினி பூச்சிகளுக்கு காதலின் போதும் உதவுமாம். பொதுவாக ஆண் மின்மினி பூச்சிகள் இணையை கண்டுபிடிப்பதற்காக, கவர்வதற்காக தனது பின் பக்கம் ஒளியை ஏற்படுத்தும். இப்படி ஆண் மின்மினி பூச்சிகள் சேர்ந்து எழுப்பும் ஒளி மூலமாகவே அதன் இருப்பிடத்தை பெண்கள் கண்டுபிடித்து, அதனுடன் கூட முடியும்.

முக்கியமாக பல பூச்சிகள் இருக்கும் காட்டில் ஆண் மின்மினி பூச்சிகளை பெண் மின்மினி பூச்சிகள் எளிதாக கண்டுபிடிக்க இந்த வெளிச்சம் உதவியாக இருக்கும். ஆணும், பெண்ணும் கூடியபின் மீண்டும் பெண் மின்மினி பூச்சிகள் மரத்தில் முட்டைகளை இட்டு அதை வளர்க்க தொடங்கும். இதன் சுழற்சி இப்படியே தொடரும்.

இப்படி தற்போது மனம்பள்ளி காட்டில் ஆண் மின்மினி பூச்சிகள் ஒன்றாக சேர்ந்து எழுப்பும் காதல் " வெளிச்சம் காரணமாகவே அங்கே ரம்மியமான காட்சிகள் அரங்கேறி உள்ளன. பொதுவாக எல்லா எரியக்கூடிய விளக்கும் ஒரு வித வெப்பத்தை வெளிப்படுத்தும். ஆனால் மினிமினி பூச்சிகள் ஏற்படுத்தும் இந்த வெளிச்சம் காட்டில் எந்த விதமான வெப்பத்தையும் ஏற்படுத்தாது. மினிமினிகளின் உடலும் வெப்பம் அடையாது. இதை bioluminescence என்று அழைப்பார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீராம் முரளி எடுத்த புகைப்படத்திற்குத்தான் தற்போது இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

வைட் அமைப்பு: 2022ல் உருவாக்கப்பட்ட வைட் அமைப்பு மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் ஆனைமலை தொடர் மின்மினி பூச்சிகள் அதிகம் இருக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. மதி துமிலன், ஸ்ரீதர் போன்ற வைட் நிறுவன இணை நிறுவனர்களும் இங்கே மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து, மனிதர்கள் பயன்படுத்தும் விளக்குகளால் ஏற்படும் அபாயம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+