எடப்பாடி காரை சுற்றி வளைத்த பறக்கும் படையினர்.. சல்லடை போட்டு அலசல்! நீலகிரியில் வைத்து தீவிர சோதனை
நீலகிரி: தேர்தல் பிரசாரத்திற்காக நீலகிரி சென்று இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரை மறித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனால், தேர்தல் ஆணைய விதிகளின் படி அனைத்து கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. தனிநபர்கள் 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி செல்ல அனுமதி கிடையாது.
இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க இத்தகைய கண்காணிப்பு பணியில் தீவிரமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரிசுபொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா.. வாக்களர்களுக்கு விநியோகிக்க கிஃப்ட் பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக சந்தேகத்திடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று நீலகிரியில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி காரில் , தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான காரை வழிமறித்த பறக்கும் படை அதிகாரிகள் அவரது கார் முழுவதும் சல்லடை போடாத குறையாய் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நடைபெற்ற போது எடப்பாடி பழனிசாமி காரின் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது அதிமுகவினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டது. சோதனை முடிந்த பிறகு எடப்பாடி தனது காரில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக இன்று ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் காரிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் பிரச்சாரம் செய்யச் சென்ற ஓ. பன்னீர்செல்வத்தின் வாகனம் மற்றும் பரப்புரை வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அவரது காரில் வைத்திருந்த பர்ஸை திறந்து காட்டுமாறு கூறிய அதிகாரிகள், அதில் அதிகளவில் பணம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications