ஹாஸ்டலில் சேர ரூ.10,000 லஞ்சம்.. பரவிய ஷாக் வீடியோ! உதகை அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்!
நீலகிரி: உதகையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேர அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம், பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சுமார் 4,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஏழை, எளிய மாணவர்கள், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அரசுக் கல்லூரியில் சேரவும், ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் சேரவும் மாணவர்களிடம், பேராசிரியர்களும், முதல்வரும் பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மாணவர் ஒருவரிடம், அரசுக் கல்லூரி முதல்வர் பணம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்காக லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உதகை அரசு கலைக் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க பட்டியலின மாணவர்களிடம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முதல்வர் அருள் ஆண்டனி, வேறு துறைக்கு மாறுவதற்கு மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற தாவரவியல் இணை பேராசிரியர் ரவி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications