நீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்!
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்ய முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video

நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மீட்பு பணிகளை செய்ய முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கி நாடு முழுக்க கடுமையாக பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக கோவை மண்டலத்தை சேர்ந்த பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கோவை, சேலம், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தினமும் மழை பெய்து வருகிறது. அதே சமயம் நீலகிரியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

எங்கு
நீலகிரியில் நேற்று இரவும் கனமழை பெய்தது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 350 மிமீ மழை பெய்துள்ளது.
நேற்று நீலகிரியின் தேவலா பகுதியில் 13 செ.மீ மழை பதிவானது. அதேபோல் கோவையின் சின்னக்கல்லாறுவில் 10 செ.மீ மழை பதிவானது. மேலும் அவலாஞ்சி (நீலகிரி), சோலையாறு (கோவை) ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவானது.

நீலகிரி எப்படி
மழை காரணமாக நீலகிரியில் மீட்பு பணிகளை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் இன்றும் கனமழை தொடருமீ ன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரியில் மொத்தம் 233 இடங்கள் இப்படி மழை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

என்ன நிலை
முக்கியமாக கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2600 மிமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் அவலாஞ்சிதான். நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம்
முக்கியமாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 5000 ஆயிரம் மக்கள் வரை மொத்தமாக வீடுகளை விட்டு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications