மொத்தமாக துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி.. 5வது நாளாக தொடரும் வரலாறு காணாத மழை.. மக்கள் தவிப்பு!
நீலகிரியில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி: நீலகிரியில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை வருகிறது.

அதிகம் என்
இந்த மழை காரணமாக தமிழகத்தில் நீலகிரியில்தான் மிக அதிக அளவில் பெய்து வருகிறது. நீலகிரியில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து விடமால் மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

அவலாஞ்சி எப்படி
அதேபோல் அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 450 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல் இன்றும் 500 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

எப்படி
நீலகிரியில் மொத்தம் 233 இடங்கள் இப்படி மழை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் வான்வழியாக அங்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது
கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் அவலாஞ்சி மொத்தமாக தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சி பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மீட்பு படையினரும் அங்கு செல்ல முடியவில்லை.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications