ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? வெளியானது இணையதள முகவரி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி செல்ல வரும் 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியான நிலையில் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் நாளை முதல் பொதுமக்கள் இ-பாஸ் பெறலாம். இ-பாஸ் பெற கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் கிடைக்கும்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் ஏராளமான பொதுமக்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு செல்வது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் ஊட்டி, கொடைக்கானல் சாலைகளில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான மக்கள் வருகையால் கொரோனா காலத்தை போல் இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டத.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோரக்க இ-பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இ-பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது.
இந்நிலையில் தான் ஊட்டி செல்ல இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவித்தார் நீலகிரி கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். epass.tnega.org இணையதளம் வாயிலாக இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்யலாம் என நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மே 7 ம் தேதி நாளை மறுநாள் வருகிறது. இருப்பினும் முன்கூட்டியே பொதுமக்கள் நாளை முதல் இந்த இணையதள முகவரி மூலம் இ-பாஸ் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ஊட்டி இ-பாஸ் தொடர்பான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதுபற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவாக உள்ளது. மேலும் இ-பாஸ்க்கு என்று வழிக்காட்டுதல்களை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதன்படி சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் என்பது டிஎன்இஜியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்முறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய் வேண்டும்.
இப்படி விண்ணப்பம் செய்யும்போது ஆர்டர் ஜெனரேட் ஆகும். அதில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை சோதனையில் இருக்கும் அதிகாரிகள் பரிசோதித்து வேலிடா? இல்லையா? என்பதை பார்த்து வாகனங்களை அனுமதிப்பார்கள். இந்த இ-பாஸ் நடைமுறை என்பது ரொம்ப ஈஸியானது. யாராவது வெளிநாடுகளில் இருந்து வந்தால் அவர்கள் இ-மெயில் விபரத்தையும், நம் நாட்டில் உள்ளவர்கள் செல்போன் எண் விபரத்தையும் பயன்படுத்தி தங்களின் சுயவிபரங்களை பதிவிட்டால் போதும். எங்கிருந்து வருகிறோம் என்பதையும், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருப்பார்கள், எந்த இடத்தில் தங்க உள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டும்.
மேலும் பயணிக்கும் வாகனம் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும், வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிவிடும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸ் நடைமுறையில் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வாகனங்களுக்கான இ-பாஸ் பதிவு நடைமுறை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். மேலும் ஊட்டி வருபவர்கள் இ-பாஸை நீட்டிப்பு செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.
மாறாக பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அதேபோல் நீலகிரி பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஊட்டியில் வசிக்கலாம். அவர்கள் வேறு பதிவெண் கொண்ட வாகனங்களை ஊட்டியில் பயன்படுத்தலாம். இதுதொடர்பாக ஆர்டிஓவிடம் தகவல்கள் கேட்டுள்ளோம். அந்த தகவல் டேட்டா பேஸில் சேர்த்து என்டரி செய்ய உள்ளோம். இதனால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்படாது. வாடகை கார் ஓட்டுவோருக்க வணிக ரீதியிலான சீசன் பாஸ் என்பது ஒரு மாதத்துக்கு வழங்கப்பட உள்ளது.
இது ஒரு சோதனை முறையில் செயல்படுத்தப்படும் திட்டமாகமகும். கட்டுப்பாடுகள் இருந்தால் தான் திட்டத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது இ-பாஸ் பெறும் நடைமுறையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. '' என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications