விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு: தடயவியல் குழு கண்டறிந்தது
ஹெலிகாப்டர் விபத்து நடந்த மலைப்பகுதியில் விபத்தின் முக்கிய சாட்சியாக விளங்கும் ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் அது கிடைத்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த மலைப்பகுதியில் விபத்தின் முக்கிய சாட்சியாக விளங்கும் ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் சிறப்புக்குழு ஈடுபட்ட நிலையில் அது கிடைத்துள்ளது. சம்பவ இடத்தில் விமானப்படை தளபதி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர் இதில் கருப்புப்பெட்டி சிக்கியது.

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர்
பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக இருந்தாலும் ஒவ்வொருமுறையும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கப்பட்ட ஹெலிகாப்டர். உலகின் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் இதும் ஒன்று.

ஹெலிகாப்டர் விபத்து
நேற்று காலை முக்கிய நிகழ்ச்சிக்காக முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என 14 பேர் கோவை சூலூரிலிருந்து வெலிங்டன் ராணுவதளத்துக்கு எம்.ஐ சீரிஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் என்பவர் காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

முப்படை தளபதி மனைவியுடன் உயிரிழப்பு
இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைவர் உடல்களும் கருகிய நிலையில் டி.என்.ஏ சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முறையான காரணம் விரிவான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

விபத்து நடந்ததற்கு முன்
எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் விவிஐபிக்கள் பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக உள்ள ஹெலிகாப்டர் ஆகும். டெல்லியில் இந்த ஹெலிகாப்டர் புறப்படும் முன் கடுமையான சோதனைக்கு முன்னரே புறப்பட்டுள்ளது. மேண்டேட்ரி செக் எனப்படும் மெக்கானிக்கல் சோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டப்பின் புறப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகள் செய்யப்பட்டதை மீறி விபத்து நடந்தது என்றால் அது மனித ஆற்றலை மீறி நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சூலூரிலிருந்து காலையில் புறப்பட்ட ஹெலிகாப்டர்
டெல்லியிலிருந்து கோவை மாவட்டம் சூலூருக்கு வந்தப்பின் காலை 10-40 க்கு வெலிங்கடன் நோக்கி புறப்பட்டுள்ளனர். குன்னூருக்கு அருகே காட்டேரி என்கிற மலைப்பாதைக்கு அருகே செல்லும் முன் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. விபத்துக்கு முன் ஹெலிகாப்டர் தடுமாறியதாகவும் மரத்தின் மீது மோதியதாகவும் நேரில் பார்த்த ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். விமானம் புறப்பட்ட 30 நிமிடங்கள் பறந்த நிலையில் இறங்கும் இடத்தை நெருங்க 5 நிமிடம் உள்ள நிலையில் விபத்தில் சிக்கியது.

சிக்னல் டிராப் ஆனதால் விபத்தா?
சிக்னல் ட்ராப் ஆனதால் விபத்து என்பதை நிபுணர்கள் ஏற்க மறுக்கின்றனர். சிக்னல் இல்லாவிட்டாலும் எஸ்.ஓ.பி எனப்படும் ஸ்டாண்டர்ட் ஆபரேஷன் ப்ரொசீஜர் மூலம் திறமை வாய்ந்த விமானி குறிப்பிட்ட இடத்திற்கு எளிதாக செல்ல முடியும். அதுவுமல்லாமல் நூறு முறைக்கு மேல் இதே பகுதியில் இக்குறிப்பிட்ட ஹெலிகாப்டரை இயக்கியுள்ளார் பைலட் ஆகவே விபத்து குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் வருகின்றன.

கருப்புப்பெட்டியே தீர்வு
விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிருடன் உள்ளார். அவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். ஆகவே விபத்து குறித்து சரியான தகவலைப்பெற வேண்டுமானால் ஹெலிகாப்டரில் இருக்கும் கருப்புப்பெட்டியே உதவும். கடைசி நேர உரையாடல்கள் அதில் பதிவாகியிருக்கும் என்பதால் அதை தேட இந்திய விமானப்படையின் சிறப்பு விசாரணைக்குழு குன்னூர் வந்தது.

கருப்புப்பெட்டியை கண்டெடுத்த ஐஏஎஃப் குழுவினர்
விபத்து நடந்த இடம் மலைப்பாங்கான பகுதி, அடர் வனம் என்பதாலும், தீப்பிடித்து எரிந்ததாலும் கருப்புப்பெட்டியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கருப்புப்பெட்டியை கண்டுபிடிக்க ஐஏஎஃப் சிறப்பு விசாரணைக்குழு சம்பவ இடத்தில் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளது. கருப்புபெட்டி விபத்தில் சிக்கிய ஹெல்காப்டரில் உள்ள சிடிஆர் கருவி ஆகும். இது எந்த சூழ்நிலையிலும் உடையாது, எரியாது, அதில் உள்ள தகவல்கள் அழியாது. ஆகவே அதை கண்டுபிடிப்பது விபத்தின் விசாரணைக்குழுவின் முக்கிய பணியாகும். தற்போது அது கிடைத்துள்ளது.
பெங்களூர் அல்லது டெல்லி கொண்டுச் செல்லப்படும் கருப்புப்பெட்டி
கருப்புப்பெட்டி கிடைத்ததை அடுத்து அது ஆய்வுக்காக பெங்களூர் அல்லது டெல்லிக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. தற்போது இது வெலிங்கடன் ராணுவ மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்லப்பட்டது.

தடயவியல் சோதனை
இது தவிர கூடுதலாக விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் சோதனை என்பது ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை அங்குள்ள பொருட்களை சேகரித்து, கள ஆய்வு நடத்தி முழு விசாரணைக்குப்பின் ஒரு காட்சியை தயாரித்து அளிக்கும். இது விசாரணைக்கு முக்கியமான பகுதி ஆகும்.
Recommended Video

ஐஏஎஃப் தளபதி, டிஜிபி விசாரணை
விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார். தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்த பகுதி முழுவதும் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications