Gold Mining: நீலகிரி வனப்பகுதியில் தங்க சுரங்கம்.. சட்டவிரோதமாக அள்ளி செல்லும் மர்ம நபர்கள்! கொதிப்பில் உள்ளூர் மக்கள்
நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே தேவாலாவில் ஆங்கிலேயர் கால தங்கம் சுரங்கம் உள்ளது. இந்த தங்க சுரத்திற்கு செல்ல முடியாதவாறு வனத்துறை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் யாரோ மர்ம நபர்கள் சிலர் புகுந்து தங்க துகள்களை அள்ளி செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலா என்ற இடம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் கால தங்கம் சுரங்கம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் மிகவும் பாதுகாப்பு மிக்க பகுதியாக உள்ளது.

வனத்துறை தீவிர கண்காணிப்பு
பொதுமக்கள் யாருக்கும் செல்ல அனுமதி கிடையாது. இருந்தாலும் அவ்வப்போது இப்பதிக்குள் சட்டவிரோதமாக சிலர் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில்தான், தடையை மீறி மீண்டும் தேவாலா வனப்பகுதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் சிலர் தங்க துகள்கள் கலந்த மண்ணை தோண்டி எடுத்துசெல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தோண்டப்பட்ட ஆபத்தான குழிகள் உள்ளன. இதில் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் விழுந்து உயிரை விடும் நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கிறது. எனவே ஆபத்துமிக்க இந்த பகுதிக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என்பதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தங்க துகள்களை அள்ளுவதாக
இந்தநிலையில் தான், மீண்டும் மர்ம நபர்கள் புகுந்து தங்க துகள்களை அள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வனத்துறையினர் தீவிர ரோந்து பணி தொய்வு காரணமாகவே தடையை மீறி வனப்பகுதிக்குள் பலர் புகுந்து தங்கத்துகள்களை சேகரித்து செல்வதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கேரளாவிற்கு அருகில் உள்ள இடம் என்பதால், கேரளாவை சேர்ந்தவர்களும் தினமும் தேவாலா தங்க சுரங்கம் உள்ள வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தங்கத் துகள்களை வெட்டி சேகரித்து செல்வதாக தேவாலா, நாடு காணி சுற்றுவட்டார பகுதி மக்கள் வருவாய்த்துறையிடம் புகார் அளித்து இருக்கிறார்கள்.
போலீசார் தடுக்க வேண்டும்
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "தமிழக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் கேரளவை சேர்ந்த சிலர் தங்க துகள்களை அள்ளி செல்கிறார்கள். இதனை வனத்துறையோ, காவல்துறையோ கண்டு கொள்வது இல்லை. எனவே, போலீசார் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என்றனர்.
இதையடுத்து, கூடலூர் ஆர்டிஓ குணசேகரன், தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திங்கள் கிழமை, தேவாலாவில் தங்க சுரங்கம் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், தோவலா வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. இங்கு செல்லக்கூடாது. போலீசார் மற்றும் வனத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
நீலகிரியில் தங்க சுரங்கமா?
பந்தலூர் தேவாலா பகுதியில் கடந்த 1831ஆம் ஆண்டு தங்க படிமங்கள் இருப்பதை ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். லண்டனை சேர்ந்த ஹூகேனின் என்பவர்தான், ஆல்பா கோல்டு மைனிங் என்ற நிறுவனம் சார்பாக சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து சென்றார். ஆனால், இதற்கான செலவு அதிகமாக இருப்பதாக கூறி1839ல் சுரங்க பாதைகள் மூடப்பட்டன.
பின்னர் 1901 ஆம் ஆண்டு மீண்டும் ஆங்கிலேயர்கள் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்தனர். ஆனாலும் இதில் எதிர்பார்த்த பலன் இல்லாததால் திட்டம் கைவிடப்பட்டது. இருந்த போதிலும், கடந்த பல ஆண்டுகளாகவே நாடுகாணி, தேவாலா, கைதக்கொல்லி, பொன்வயல், காட்டி மட்டம், கிளன்ராக் பகுதிகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டவிரோத சுரங்க குழிகள் தோண்டப்பட்டு இருக்கிறது.
இங்கு சட்ட விரோதமாக தங்க படிமங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குழிகளில் மூச்சுத்திணறல் ஏற்பட்டும், மண் மற்றும் பாறைகள் மூடியும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications