Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அங்கங்களை மோசமா வர்ணித்த பேராசிரியர்.. மிரண்ட தலித் ஆசிரியை.. ஊட்டிக்கே பறந்து வந்த சஸ்பெண்ட் ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கிவரும் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையின் உதவி பேராசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த சம்பவம் கடந்த ஏப்ரலில் வெளியாகி பெரும் சலசல்பபை ஏற்படுத்தி இருந்தது. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் நடந்து வந்தநிலையில், தற்போது, இதுகுறித்த முக்கிய முடிவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியராக தர்மலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி இவரும் துறையின் உதவி பேராசிரியையும் கல்லுரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்றிருக்கிறார்கள். கல்லூரி முதல்வரின் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது தர்மலிங்கம் உதவி பேராசரியையின் உடல் அங்கங்களை வர்ணித்துள்ளார். மட்டுமல்லாது, தனிப்பட்ட பாலியல் உறவுமுறை குறித்தும் விசாரித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத பேராசிரியை அவரிடமிருந்து விலகி சென்றிருக்கிறார். அடுத்த நாள் இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் அளித்தும் தர்மலிங்கம் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

 புகார்

புகார்

இந்த புகார் குறித்து உள்ளகக் குழுவிடம் (Internal Committee) தெரிவிப்பதாக முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தர்மலிங்கம் தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டதாகவும் அவரிடமிருந்து மன்னிப்பு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் ஈஸ்வரமூர்த்தி கூறியுள்ளார். ஆனால் ஈஸ்வரமூர்த்தி வாக்குறுதி அளித்ததைப்போல இந்த புகாரை ஐசிக்கு கொண்டு செல்லவில்லை. இதனையறிந்த உதவி பேராசிரியை முதல்வர் ஈஸ்வரமூர்த்தியிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர், வாய்மொழியான புகார் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் எனவே எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 போராட்டம்

போராட்டம்

இப்படி தர்மலிங்கத்தின் மீதான நடவடிக்கை தாமதமாகியுள்ளது. இதனையடுத்து நம்பிக்கையிழந்த உதவி பேராசிரியை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்லூரி கல்வி இயக்குநரகம், கல்லூரி கல்வி இயக்ககத்தின் மண்டல இயக்குநர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பல்வேறு இடங்களில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆனால் இதற்குள் தர்மலிங்கம் மற்றொரு புகாரை தலித் உதவி பேராசிரியர் மீது முன்வைத்தார். அதாவது ரூ.2 லட்சம் கடனாக உதவி பேராசிரியை கேட்டதாகவும் தான் தர மறுத்ததால் இம்மாதிரியான புகாரை தெரிவித்தாகவும் தர்மலிங்கம் கூறியிருந்தார்.

 போலி விசாரணை

போலி விசாரணை

இந்த புகாரை மையப்படுத்தி உண்மையறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விசாரணைக்கு முதல்வர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் உள்ளகக் குழு (ஐசி) இந்த விசாரணையில் இறங்கியது. இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பேராசிரியர் தர்மலிங்கம் கொடுத்த புகாரில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், கல்லூரி முதல்வர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசாரணை ஒருதலைபட்சமானது எனவும், இந்த விசாரணையில் உதவி பேராசிரியை அவமானப்படுத்தப்பட்டுள்ளதாகவம் உள்ளகக் குழு (ஐசி) விசாரணையில் தெரிய வந்தது.

உதவி

உதவி

மட்டுமல்லாது கடந்த ஓராண்டு காலமாக இந்த கல்லூரியில் உதவி பேராசிரியை கடுமையான சாதிய வன்கொடுமைகளை சந்தித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வாறு புகார் எழுந்தால் யுஜிசி தளத்தில் இப்புகாரை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போதுவரை அப்படி எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில உள்ளகக் குழு (ஐசி) பேராசிரியர் தர்மலிங்கத்தை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், இவரும் கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தியும் ஓரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தர்மலிங்கத்தின் தவறை மறைக்க உதவி செய்துள்ளார் என்பதையும் உள்ளகக் குழு (ஐசி) அம்பலப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+