டாப் திமுக தலைக்கு குறி! தமிழ்நாட்டில் போட்டியிடும் மத்திய அமைச்சர்! ராசாவா? வேலையை ஆரம்பித்த பாஜக
நீலகிரி: தமிழ்நாட்டில் நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் ஒருவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். நாமக்கல்லில் கடந்த இரண்டு வாரம் முன் மெகா கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம். தேர்தலை சந்திப்போம் என்று கூறினார். அதிமுகவின் அதிகாரபூர்வமற்ற லோக்சபா தேர்தல் பிரச்சார முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

நீலகிரி
இந்த நிலையில்தான் நேற்று நீலகிரியில் நடைபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு தமிழ்நாடு அரசின் டேன் டீ தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சில பகுதிகளையே தமிழ்நாடு அரசு வனத்துறையுடன் ஒப்படைக்க உள்ளது. இதையடுத்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். அங்கு வேலை பார்க்கும் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில்தான் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்து அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை போராட்டம்
இதில், டேன் டீ நிறுவனம் பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம். அவர்களுக்கு சொந்தமான இந்த பகுதியை விற்க பார்ப்பது தவறு. இதனால் பலர் வேலை இழப்பார்கள். உங்களால் டேன் டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் அதை விற்றுவிடுங்கள். மத்திய அரசுக்கு இந்த நிறுவனத்தை கொடுத்து விடுங்கள். நீங்கள் நடத்த வேண்டாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை. இதற்கு திமுகவினரோ.. முதலில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை நடத்தட்டும். அதில் monetization என்று கூறி செய்யப்படும் அந்நிய முதலீடுகளை தடுத்து நிறுத்துங்கள். அப்பறம் மாநில நிறுவனத்தை பற்றி பேசலாம், என்று அண்ணாமலைக்கு விமர்சனம் வைத்து உள்ளனர்.

எல் முருகன்
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அண்ணாமலை பொதுவாக கோவையில் போராட்டம் செய்வார். இல்லையென்றால் சென்னைக்கு வருவார். திடீரென நீலகிரிக்கு வந்தது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் சில முக்கிய தகவல்களுக்கு நமக்கு வழங்கினார்கள். அதன்படி 2024 லோக்சபா தேர்தலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது. எல் முருகன் தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி அமைச்சராக இருக்கிறார். அவரை 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரியில் களமிறக்க வாய்ப்பு உள்ளது.

ஆ ராசா
நீலகிரியில் மாஸ்டர் மதன் இருந்த 1998 - 2004 காலகட்டத்தில் மட்டும் இங்கு பாஜக வென்றது. அதன்பின் இங்கே பாஜக வெற்றிபெறவே இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள்தான் கடந்த 4 லோக்சபா தேர்தல்களில் இங்கே மாறி மாறி வெற்றிபெற்றது. 2009-2014ல் திமுக சார்பாக இங்கே ஆ ராசா வென்றார். அதன்பின் 2019லோக்சபா தேர்தலில் இங்கே மீண்டும் ஆ. ராசா வென்றார். இந்த நிலையில்தான் இந்த இடத்தில் எல் முருகனை ஆ. ராசாவிற்கு எதிராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். ஆ. ராசா இந்துத்துவா அரசியலை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

பின்னணி
அவரின் பேச்சுக்கள் பாஜகவை கடுமையாக தாக்கி வருகின்றன. திமுகவில் உள்ள மற்ற மூத்த தலைவர்களை விட இவர்தான் இந்துத்துவா அரசியலை தீவிரமாக எதிர்க்கிறார். திமுக எம்பி ஆ. ராசா கூட சனாதனத்தையும், இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து கடுமையாக பேசி வருகிறார். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பாஜக அப்செட்
இதனால் அப்செட் ஆன பாஜக இவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக முருகனை நீலகிரியில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அமைச்சர் முருகன் அங்கு தேர்தல் பணிகளை செய்ய இருக்கிறாராம். அதற்கு முன்னேற்பாடாகவே அண்ணாமலையை களமிறக்கி அங்கு போராட்டம் செய்ய வைத்துள்ளனர் என்கிறார்கள். ராசா இந்த விஷயங்களை எல்லாம் முன்பே கணித்து அடிக்கடி தனது தொகுதிக்கு விசிட் அடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் பிஸியாக இருந்த அவர் அடிக்கடி தனது தொகுதி பக்கம் சென்று வருகிறார் என்று கூறப்படுகிறது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications