ஹெலிகாப்டர் விபத்தை டிவியில் பார்த்து.. கதறியபடியே மயங்கி விழுந்த விங் கமாண்டரின் தாய்.. சோகம்
விங் கமாண்டர் பிஎஸ் சவுதான் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி தந்துள்ளனர்
ஊட்டி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில், விங் கமாண்டர் பிஎஸ் சவுகானும் ஒருவர்.. இவரது மரண செய்தியை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததுடன், அவரது தாய் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
குன்னூர் அருகே, நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் சிக்கியது...
மரத்தில் மோதிய வேகத்தில், அந்த ஹெலிகாப்டர் சட்டென தீப்பிடித்து எரிந்ததில், ராவத்தும், அவர் மனைவி உட்பட 13 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரி
இதில், ஒரு அதிகாரி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்... இந்த விபத்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. ஒருவேளை இது எதிரி நாடுகளின் சதி திட்டமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது... இதனிடையே விபத்து எப்படி நேரிட்டது என்பது தொடர்பான விவரங்களை ஹெலிகாப்டரின் கருப்புபெட்டியில் தான் அறிய முடியும். அதனால், அந்த கருப்புப் பெட்டியை தேடும் பணி நேற்று முதலே தொடங்கி நடைபெற்று வந்தது.

கடைசி நேரம்
இந்த நிலையில் குன்னூர் அருகே காட்டேரி நச்சுப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது? விபத்துக்கான காரணம் உட்பட தெரியவரும்.. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மீள முடியாத அதிர்ச்சியில் உள்ளனர்.. இந்த எம்.ஐ17 வி5 ரக ஹெலிகாப்டரின் தலைமை பைலட் தான் பிஎஸ் சவுகான்...

குடும்பத்தினர்
இவர் ஆக்ராவை சேர்ந்தவர்.. மனைவி, 12 வயதில் ஒரு மகள், 9 வயதில் ஒரு மகனும் இவருக்கு இருக்கிறார்கள்.. இவரது மரண செய்தியை குடும்பத்தினர் டிவியை பார்த்துதான் முதலில் தெரிந்து கொண்டுள்ளனர்.. நேற்று காலை, பி.எஸ்.சவுகானின் மாமனார், சவுகானின் அம்மாவுக்கு போன் செய்து, டிவியை பார்க்குமாறு சொல்லி உள்ளார்.. அப்போதுதான், மகன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதும், அதில் இருந்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பிருக்காது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
Recommended Video

அதிர்ச்சி
இதை பார்த்து கதறியபடியே தாய் சுசிலா மயங்கி கீழே விழுந்துள்ளார்... மகன் இறந்ததை டிவி மூலம்தான் தெரிந்து கொண்டோம் என்று சவுகானின் அப்பா சுரேந்திர சிங் சவுகான் கண்ணீர் மல்க கூறுகிறார்.. அதேபோல, சவுகானின் சகோதரி மீனா சிங் சொல்லும்போது, "31 வருஷங்களுக்கு பிறகு, இந்த வருட ரக்ஷாபந்தன் அன்றுதான், நாங்கள் எங்கள் தம்பியை சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தோம்.. எங்கள் மீது உயிரையே வைத்திருப்பான்.. எல்லாரிடமும் அன்பாக பேசுவான்.. நாங்க எது கேட்டாலும் இல்லை என்று சொன்னதில்லை, உடனே வாங்கி தந்துவிடுவான்" என்று கதறி அழுது கொண்டே சொல்கிறார்.












Click it and Unblock the Notifications