கதிகலங்கும் புள்ளிகள்.. 'அந்த' இரண்டரை மணி நேரம்.. கொடநாடு எஸ்டேட் மேனேஜரிடம் ஐஜியே நேரில் விசாரணை
எஸ்டேட் மேனேஜரிடம் விசாரணை நடந்து வருகிறது
ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேனேஜர் நடராஜன் ஆஜரானார்.. அவரிடம் அதிகாரிகள் இரண்டைரை மணி நேரம் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்... இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.
கொடநாடு எஸ்டேட் மேனேஜராக இருந்தவர் நடராஜன்.. இவர்தான் எஸ்டேட் நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்.
சசிகலா சிறையில் இருந்தபோதும் நடராஜனிடம்தான் எஸ்டேட் பொறுப்பில் இருந்தது.. தஞ்சை பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.. சசிகலா குடும்பத்திற்கும் நீண்ட காலமாக நெருக்கமானவர் என்பதாலும், அவரது பரிந்துரையாலும்தான், கொடநாடு எஸ்டேட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்..

கொலை, கொள்ளை
இந்நிலையில்தான், எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை நடந்தது... இது தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான மற்றும் மனோஜ் இருவருமே போலீசாரிடம் நிறைய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

ஆஜராகவில்லை
மிக முக்கியமான வாக்குமூலங்கள் என்பதால், அதனடிப்படையில்தான் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. சயான், மனோஜ் இருவருக்கு பிறகு, மேனேஜர் நடராஜன் அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. அதனால் நேற்றைய தினம், ஊட்டி கோர்ட்டில் இதுதொடர்பாக நடராஜனிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் நடராஜன் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை.

சம்மன்
அவருக்கு போலீஸார் சம்மன் வழங்கவில்லை என்பதாலேயே அவர் நேற்றைய தினம் ஆஜராகவில்லை என்று சொல்லப்பட்டது.. இந்நிலையில், மேனேஜர் நடராஜன் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்... தன்னுடைய வழக்கறிஞருடன் நடராஜன் அங்கு வந்துள்ளார்.. மேற்கு மண்டலா ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இரண்டரை மணி நேரம் நடராஜனிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

அதிகாரிகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகள் சம்பந்தமான மிக முக்கிய தகவலை நடராஜன் அப்போது அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது... காலை 10.30 க்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணிக்கு முடிந்தது.. ஆனால் விசாரணை முடிந்த நிலையில், நடராஜன் செய்தியாளர்களிடம் பேச மறுத்த நிலையில், அவரது வழக்கறிஞர், "விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறோம்" என்று கூறினார்.. போலீசார் நடராஜனிடம் கேட்ட கேள்விகளுக்கு, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகவும், விசாரணையில் காவல்துறைக்கு திருப்தி இல்லாததால், மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது உடனடியாக ஆஜராக வேண்டுமென காவல்துறையினர் நடராஜனுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனுத்தாக்கல்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இருவரையும் விசாரிக்க கோரிய மனுவும், சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

அனுமதி
இந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், எஸ்டேட் மேனேஜர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது.. ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

பரபரப்பு
இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா இருவரையும் விசாரிக்க கோரிய மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.. நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை செப்டம்பர் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.. ஒருபக்கம் இந்த வழக்கு விசாரணையும், மறுபக்கம் நடராஜனிடம் விசாரணையும் என கொடநாடு விவகாரம் பரபரத்து வருகிறது.. இதனால், அதிமுக மேலிடம் கதி கலங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications