Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவிந்த தேசிய ஊடகங்கள்.. காரசார வாதம்.. கோடநாடு வழக்கால் பரபரத்த ஊட்டி நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று, விசாரணை அறிக்கையை உதகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை.

கோடநாடு எஸ்டேட் வழக்கு தொடர்பாக உதகை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று முக்கிய சாட்சியமான சயான் அழைத்து வரப்பட்டிருந்தார். எனவே, ஒட்டுமொத்த ஊடகங்களின் கவனம் அங்கு திரும்பி இருந்தது.

முக்கிய புள்ளி

முக்கிய புள்ளி

கடந்தமுறை சயான், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,அதிமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

இந்த நிலையில்தான் மறுநாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , இந்த வழக்கில் தன்னை சிக்க வைப்பதற்கு முயற்சிகள் நடப்பதாகவும், தனது பெயரை சயான் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக சில நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதுபோன்ற காரணங்களால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்றது. எனவே, தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்களின் நிருபர்களும் உதகை நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். இதனால் உதகை நீதிமன்ற வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

 பரபரப்பாக மாறிய நீதிமன்றம்

பரபரப்பாக மாறிய நீதிமன்றம்

இன்றைய தினம், காவல்துறை தரப்பு சயான் என்ன வாக்குமூலம் அளித்தார் என்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவேதான் இத்தனை பரபரப்பும் அங்கு ஏறிப்போயிருந்தது. எந்த முக்கிய தலைவர் பெயரை சயான் தெரிவித்திருப்பார் என்று பல ஹேசியங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், விசாரணை குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்று வழக்கறிஞர்கள் தரப்பு செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்து விட்டனர்.

ஆஜராக உத்தரவு

ஆஜராக உத்தரவு

ஆக மொத்தம், இன்றைய தினம், காவல்துறை தரப்பு வாதங்கள்., சயான் தரப்பு விசாரணை மற்றும் தமிழக அரசின் தரப்பு வாதங்கள் போன்றவை முன் வைக்கப்பட்டுள்ளன. கோடநாடு எஸ்டேட் மேலாளர் , மின்சார துறை அதிகாரி ஆகியோர் செப்டம்பர் 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Recommended Video

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை.. கோடநாடு வழக்கில் யாரும் தப்ப முடியாது- Minister Thangam Thennarasu
    ஒத்திவைப்பு

    ஒத்திவைப்பு

    விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றதில் உள்ள கோடநாடு வழக்கு விசாரணையின் இன்றைய முடிவிற்காக காத்திருப்பதாக அரசு வழக்கறிஞர் ஊட்டி நீதிமன்றத்தில் சொன்னதையடுத்து, வழக்கு செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    காரசார வாதங்கள்

    காரசார வாதங்கள்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோதும், அரசு வழக்கறிஞர் இதை தெரிவித்தார். மேலும் விசாரணை விவரங்களை செய்தியாளர்களிடம் தற்போது தெரிவிக்க முடியாது என்றும் வழக்கறிஞர் தனது பேட்டியின்போது தெரிவித்தார். முன்னதாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை அமர்வு நீதிமன்றத்தில் காரசார வாதம் நடந்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அரசு தரப்புக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. இருப்பினும் அதன் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

    கோடநாடு எஸ்டேட்

    கோடநாடு எஸ்டேட்

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

    10 பேர் கைது

    10 பேர் கைது

    இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
    வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற் கொண்ட விசாரணை அறிக்கையை, கோடநாடு வழக்கு விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனால், அனைவரும் இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    சயான் ஆஜர்

    சயான் ஆஜர்

    இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மட்டுமே ஆஜராகியிருந்தார். வாளையாறு மனோஜ் போலீஸார் ஆஜர்படுத்தவில்லை. அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆஜராகினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+