ஆ. ராசா vs எல். முருகன்.. சூடு பிடிக்க போகும் "கூல்" நீலகிரி.. ஆஹா தொகுதி மாறுகிறாரா? அப்போ திருமா?
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் திமுக எம்பி ஆ. ராசா எங்கே போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல்கள் நமக்கு கிடைத்தன.
தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கிட்டத்தட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்துவிட்டார். அதோடு கொங்கு மாவட்டங்களில் பாஜக வெல்வது தொடர்பாக முக்கியமான சில ஆலோசனைகளையும் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகளுடன் மேற்கொண்டு உள்ளார்.
இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பாஜக டாப் நிர்வாகிகளிடம் நட்டா பேசி இருக்கிறார். லோக்சபா தேர்தல் வியூகங்கள் பற்றி இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர்.

ஆலோசனை என்ன?
அந்த ஆலோசனையில், கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். முக்கியமாக கோவை, நீலகிரியில் வென்றே ஆக வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம். நீங்கள் தேர்தல் மீது கவனம் செலுத்துங்கள் என்று நட்டா கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

அண்ணாமலை
மேடையில் பேசும் போதும் கோவை, நீலகிரியில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று நட்டா கூறினார். அதற்கு முன்பாக பேசிய அண்ணாமலை கோவையில் பாஜக எம்எல்ஏ நன்றாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் நீலகிரியில் இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார். இதன் மூலம் நீலகிரியில் எல் முருகன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. சமீபத்தில் நீலகிரியில் நடைபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் அண்ணாமலை, கலந்து கொண்டார். அங்கு தமிழ்நாடு அரசின் டேன் டீ தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சில பகுதிகளையோ தமிழ்நாடு அரசு வனத்துறையுடன் ஒப்படைக்க உள்ளது. இதையடுத்து அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

போராட்டம்
அங்கு வேலை பார்க்கும் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில்தான் நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்து அண்ணாமலை பேசினார்.அதில் , டேன் டீ நிறுவனம் பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனம். அவர்களுக்கு சொந்தமான இந்த பகுதியை விற்க பார்ப்பது தவறு. இதனால் பலர் வேலை இழப்பார்கள். உங்களால் டேன் டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால் அதை விற்றுவிடுங்கள். மத்திய அரசுக்கு இந்த நிறுவனத்தை கொடுத்து விடுங்கள். நீங்கள் நடத்த வேண்டாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை. இதற்கு திமுகவினரோ.. முதலில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை நடத்தட்டும். அதில் monetization என்று கூறி செய்யப்படும் அந்நிய முதலீடுகளை தடுத்து நிறுத்துங்கள். அப்பறம் மாநில நிறுவனத்தை பற்றி பேசலாம், என்று அண்ணாமலைக்கு விமர்சனம் வைத்து உள்ளனர்.

எல் முருகன்
அதன்படி 2024 லோக்சபா தேர்தலில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இங்கு போட்டியிட வாய்ப்பு உள்ளது. எல் முருகன் தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி அமைச்சராக இருக்கிறார். அவரை 2024 லோக்சபா தேர்தலில் நீலகிரியில் களமிறக்க வாய்ப்பு உள்ளது. அதனால்தான் இங்கு பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இங்கே பாஜகவிற்கு இருக்கும் வாக்கு வாங்கி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உளவுத்துறை ரிப்போர்ட் பாஜகவிற்கு சாதகமாக இருப்பதால் இங்கே எல் முருகன் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி எம்பி ஆ. ராசா எங்கே போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆ. ராசா
நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் திமுக எம்பி ஆ. ராசா எங்கே போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதன்படி ஆ. ராசா தொகுதி மாறும் விருப்பத்தில் இல்லை என்றும், இது தொடர்பாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கிடைத்ததும், தனக்கு ஆதரவு இருக்கிறதா என்று பார்த்துவிட்டு முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை நெகட்டிவ் முடிவு வந்தால் விசிக எம்பி திருமாவின் சிதம்பரம் தொகுதிக்கு ராசா மாற வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் திருமா எங்கே போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திட்டம் என்ன?
திமுகவில் யார் வென்றாலும்.. வெளிப்படையாக இந்துத்துவாவை விமர்சனம் செய்யும் ஆ. ராசா வெல்ல கூடாது என்றுதான் பாஜக எல் முருகனை அவருக்கு எதிராக களமிறக்க முடிவு செய்துள்ளதாம். அதே சமயம் எல் முருகனுக்கு எதிராக ஆ ராசா களமிறங்கவில்லை என்றால் எல் முருகன் எளிதாக நீலகிரியை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதால், திமுக எங்கே ஒரு வலுவான தலைவரை நிற்க வைக்க வேண்டும். ராசா இந்த விஷயங்களை எல்லாம் முன்பே கணித்து அடிக்கடி தனது தொகுதிக்கு விசிட் அடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் பிஸியாக இருந்த அவர் அடிக்கடி தனது தொகுதி பக்கம் சென்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

நீலகிரி வரலாறு
நீலகிரியில் மாஸ்டர் மதன் இருந்த 1998 - 2004 காலகட்டத்தில் மட்டும் இங்கு பாஜக வென்றது. அதன்பின் இங்கே பாஜக வெற்றிபெறவே இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள்தான் கடந்த 4 லோக்சபா தேர்தல்களில் இங்கே மாறி மாறி வெற்றிபெற்றது. 2009-2014ல் திமுக சார்பாக இங்கே ஆ ராசா வென்றார். அதன்பின் 2019லோக்சபா தேர்தலில் இங்கே மீண்டும் ஆ. ராசா வென்றார். இந்த நிலையில்தான் இந்த இடத்தில் எல் முருகனை ஆ. ராசாவிற்கு எதிராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
-
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications