நீலகிரியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை.. கதவை பூட்டிய பொதுமக்கள்! நூலிழையில் உயிர் தப்பிய நபர்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆளில்லாத வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது. இந்த சிறுத்தையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய நபர், சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேமுண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கசிவன். இவர் காபி தோட்டத்துக்கு நடுவே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் வீட்டை பூட்டிவிட்டு எல்லைமலை பகுதியில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் இன்று தங்கசிவன் வீட்டுக்குள் இருந்து தண்ணீர் குடம் எடுக்க இடும்பன் என்பவர் சென்றார். அப்போது அந்த வீட்டுக்கள் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அவர் வனவிலங்கு வீட்டுக்குள் நுழைந்து இருக்கலாம் என சந்தேகித்தார்.
இதனால் எச்சரிக்கையாக அவர் வீட்டுக்குள் சென்றார். அப்போ அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதாவது வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்கும் உலாவியது. அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் பயந்துபோன இடும்பன் வேகமாக வீட்டை விட்டு ஓடிவந்தார்.
அதோடு சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டினார். மேலும் சம்பவம் குறித்து உடனடியாக அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். அதேபோல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை பிடிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்டமாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தைக்கு மயக்கஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை டாக்டர் அங்கு விரைந்துள்ளார். இந்த சம்பவம் சேமுண்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications