Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛கடனில் இருக்கும் மத்திய அமைச்சர்’’.. நீலகிரி பாஜக வேட்பாளர் எல் முருகன் சொத்து மதிப்பு எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பி ஆ ராசாவை எதிர்த்து களமிறங்கும் மத்திய இணையமைச்சர் மீது 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் கடன் வைத்துள்ள எல் முருகனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக இருப்பவர் எல் முருகன். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் எல் முருகன் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Lok Sabha Election 2024 Do you the asset value of Union Minister L Murugan who contest against A Raja in Nilgris

நீலகிரியில் தற்போது சிட்டிங் எம்பியாக ஆ ராசா உள்ளார். வரும் தேர்தலில் ஆ ராசா மீண்டும் அங்கு போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக எல் முருகன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பாஜகவினருடன் ஊர்வலமாக வந்து நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து விபரங்களை உள்ளடக்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் எல் முருகன் மீது மொத்தம் 24 வழக்குகள் உள்ளன. இதில் 23 வழக்குகள் பாஜக போராட்டத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளாகும். ஒரு வழக்கு முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கு என தெரிவித்துள்ளார்.

மேலும் முருகன் தனது கையிருப்பில் ரூ.50 ஆயிரமும், அவரது மனைவி கலையரசி கையிருப்பில் ரூ.72 ஆயிரமும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். முருகனின் வங்கி கணக்கில் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 829 முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பிற முதலீடுகளையும் முருகன் செய்துள்ளார். அவரது பெரில் மாருதி சுசூகி ஸ்வீப்ட் கார் உள்ளது.

மேலும் 240 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை முருகன் வைத்துள்ளார். மொத்தமாக பார்த்தால் முருகனிடம் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்து உள்ளது. மனைவி கலையசி பெயரில் ரூ.88 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில் அவரது கலையரசி பெயரில் உள் ஹோண்டா ஆக்டிவ்வா பைக், 720 கிராம் தங்க நகைகளும் அடங்கும்.

அதோடு எல் முருகன் பெயரில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி கலையரசி பெயரில் ரூ.1 கோடியே 65 லட்சம் ரூபாய் அசையா சொத்துகள் இருக்கிறது. இதுதவிர முருகன் பெயரில் ரூ.20 லட்சம் கடன் உள்ளது. அவர் டெல்லியில் நாடாளுமன்ற கிளையின் ஸ்டேட் வங்கியில் இருந்து இந்த கடன் தொகையை பெற்றுள்ளார். மனைவி கலையரசி பெயரில் ரூ.1 கோடி கடனும் உள்ளது என அவர் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+