மாமியாரின் சயனைடு காபியால் காலியான ஊட்டி மருமகள்.. நீலகிரி போலீஸ் திடீர் வார்னிங்.. என்னாச்சு
ஊட்டி: ஊட்டி பெண்ணுக்கு, காபியில் விஷம் தந்து கொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றையும் நீலகிரி போலீசார் விடுத்திருக்கிறார்கள்.
நீலகிரி ஊட்டியில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் ஜவஹருல்லா.. இவரது மனைவி பெயர் யாஸ்மின்.. 47 வயதாகிறது.. இவர்களுக்கு இம்ரான் (27), முக்தார் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

திருமணம்: இதில், இம்ரான் என்பவர் ஆஷிகா பர்வீன் என்ற 22 வயது பெண்ணை, 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. ஊட்டி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. எனினும், இந்த காதல் திருமணத்தில் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்பதால், ஆஷிகாவை பலவகைகளில் டார்ச்சர் செய்து வந்தததாக தெரிகிறது.
இதனிடையே, மாமியார் யாஸ்மினுக்கு தன்னுடைய சொந்தக்காரர் காலிஃப்புடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.. இதை மருமகள் ஆஷிகா நேரிலேயே பார்த்துவிட்டதால், மாமியாருக்கு பீதி கிளம்பியிருக்கிறது.
மருமகள்: தங்களை பற்றி வெளியில் சொல்லிவிட்டால் ஆபத்து என்று பயந்துபோன யாஸ்மினும், காலிஃப்பும், மருமகளுக்கு சயனைடு விஷம் வைத்து கொன்றுவிட முடிவு செய்தனர்.. ஆனால், சயனைடு நகைக்கடையில்தான் கிடைக்கும் என்பதால், ஊட்டி மெயின் பஜார் பகுதியில் ஒரு நகை பட்டறையிலிருந்து சயனைடு வாங்கி, ஆஷிகா குடிக்கும் காபியில் கலந்து தந்துள்ளார். இதில் ஆஷிகா வாயில் நுரை தள்ளி இறந்துவிட்டார்.
கடந்த ஜூன் 23ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருமகள் தற்கொலை செய்து கொண்டதுபோல மாமியார் இதனை சித்தரித்துவிட்டாலும், ஆஷிகா குடும்பத்தினரோ தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக்கூறி ஊட்டி போலீசில் புகார் அளித்தனர்.
சந்தேக மரணம்: எனவே, இதனை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். எனினும் ஆவேசம் அடங்காத ஆஷிகா குடும்பத்தினர், கணவர் குடும்பத்தினரை உடனடியாக கைது செய்யக்கோரி, ஊட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். ஏடிஎஸ்பி, சவுந்தரராஜன், டவுன் டிஎஸ்பி யசோதா பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கு பிறகு புனேவில் நடந்த பரிசோதனையில், ஆஷிகா உடலில் சயனைடு கலந்திருப்பது உறுதியாகியுள்ளது... இதையடுத்து, யாஸ்மின், இம்ரான், முக்தார் உள்ளிட்ட 4 பேர் கைதாகியிருக்கிறார்கள். மாமியாரின் கள்ளக்காதலை மருமகள் வெளியில் சொல்லிவிடுவாரோ? என்ற பயத்திலேயே இந்த கொலை நடந்துள்ளது. ஆனால், மதம் காரணமாக மருமகள் கொலை செய்யப்பட்டதாக திடீர் தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறை விளக்கம்: இது தொடர்பாக நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஆஷிகா பர்வீனுக்கும், இம்ரான்கானுக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்து, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23.6.2024 அன்று ஆஷிகா பர்வீனின் தாய் நிலோபர் நிஷாவிற்கு ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்மின் போன் செய்துள்ளார். அப்போது ஆஷிகா பர்வீன் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் நிலோபர் நிஷா மருத்துவமனைக்கு சென்றபோது ஆஷிகா பர்வீன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
வலிப்பு நோய்: இதைத்தொடர்ந்து நிலோபர் நிஷா 23.6.2024 அன்று மாலை தனது மகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கொடுத்த புகாரின்பேரில் ஊட்டி நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது.
கடந்த ஆக.20ல் அறிக்கை பெறப்பட்டது. அதில், ஆஷிகா பர்வீன் சயனைடு விஷத்தால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக கடந்த 31ம் தேதி ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான்கான், மாமியார் யாஸ்மின், கணவரின் தம்பி முத்தாகிர், காலிப் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
சயனைடு விஷம்: அப்போது யாஸ்மின் மற்றும் காலிப்பிற்கு இடையே இருந்த கள்ளத்தொடர்பை ஆஷிகா பர்வீன் தெரிந்துகொண்டதாலும், இதை மற்றவர்களிடமும் சொல்லிவிடக்கூடும் என்பதாலும் ஆஷிகா பர்வீனை காபியில் சயனைடு விஷம் கலந்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் ஆஷிகா பர்வீனின் மதம் குறித்து சிலர் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக தெரியவருகிறது. குடும்ப பிரச்னை காரணமாக நடந்த கொலையால் பதியப்பட்ட வழக்கு. எனவே தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று இந்த அறிக்கையில் போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications