போட்டி போட்டு கொண்டு சத்து மாத்திரை.. பரிதாபமாக உயிரிழந்த 13 வயது சிறுமி! நீலகிரியில் பரபரப்பு
நீலகிரி: அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கோவையில் இருந்து மேல்சிகிச்சைக்காகச் சென்னை அழைத்து வரும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாறி வரும் வாழக்கைமுறை, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் நமக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் பல உடல்நலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதன் காரணமாக முன்பு அரிதாக ஏற்பட்ட பாதிப்புகளும் இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் செல்ல கஷ்டப்பட்டுக் கொண்டு பலரும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலே கூட மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள்.

மருந்துகள்
நாம் எப்போதும் டாக்டர்கள் பரிந்துரைப்படியே மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.. மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்துகள், அதிகமான டோஸ் மருந்துகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. இருப்பினும், பெரும்பாலும் இதை யாருமே முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தானாக மாத்திரை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

நீலகிரி
இதனால் மிக மோசமான பாதிப்புகளும் கூட ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தே வருகின்றனர். இதனிடையே அப்படித்தான் சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாகச் சத்து மாத்திரை சாப்பிட்டதால் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் தான் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உதகை நகராட்சி உருது பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவி தான் உயிரிழந்துள்ளார்.

4 பேருக்கு உடல்நலக்குறைவு
உதகை நகராட்சி உருது பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்குச் சத்து மாத்திரைகளை சில நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளனர். அப்போது மாத்திரை டாப்பாவை ஆசிரியர் அங்கேயே மறந்து வைத்துவிட்டதாகத் தெரிகிறது. அதை எடுத்த 4 மாணவிகள் டப்பாவில் இருந்த சத்து மாத்திரைகளைப் போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுள்ளனர். அளவுக்கு அதிகமாகச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டதால் 4 மாணவிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மோசமான பாதிப்பு
இதையடுத்து அவர்கள் கோவையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் உயர் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

உயிரிழப்பு
இருப்பினும், வரும் வழியிலேயே அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரை காப்பாற்ற உடன் இருந்தோர் முயன்ற போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் முகமது அமீன், ஆசிரியை கலைவாணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதிக சத்து மாத்திரை சாப்பிட்டதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications