நீலகிரி: திமுக ஆ.ராசாவை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்.. 'மாமன்னன்' மகன்.. யார் தெரிகிறதா?
நீலகிரி: லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 33 தொகுதிகளில் களம் காண்கிறது. திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதியில் 2009 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் ஆ.ராசா. 2014 லோக்சபா தேர்தலில் அதிமுகவின் கோபாலகிருஷ்ணனிடம் ஆ.ராசா தோல்வியைத் தழுவினார்.

நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக 2 முறை, பாஜக 2 முறை வென்றுள்ளன. இந்த முறை அதிமுக வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச் செல்வன் நீலகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த லோகேஷ்?: தமிழ்நாடு சட்டசபை முன்னாள் சபாநாயகரும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தனபால் மகன்தான் லோகேஷ் தமிழ்ச் செல்வன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தந்தை மகனாக வடிவேலு- உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்தனர். ஆதிக்க ஜாதி அரசியல்வாதிகளில் ஒடுக்கப்படும் மற்றொரு அரசியல்வாதியான மாமன்னன் - அதாவது தந்தை வடிவேலு இறுதி காட்சியில் சபாநாயகர் நாற்காலியில் அமர வைக்கப்படும் வகையில் அத் திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தனபால், ஜாதிய அடிப்படையில் ஒதுக்கப்பட்டதால் அவருக்கு சபாநாயகர் பதவியை கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கை நிகழ்வுகளையும் மாமன்னன் திரைப்படத்தையும் இணைத்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. அந்த 'மாமன்னன்' தனபாலின் மகன்தான் லோகேஷ் தமிழ்ச் செல்வன் என்பதால் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படும் பேசு பொருளாகி இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய்











Click it and Unblock the Notifications