நீலகிரி அவலாஞ்சியில் 19 செ.மீ மழை பதிவு! வீடுகள் மண்ணில் புதைவதால் அச்சம்
நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அவலாஞ்சியில் 19 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அதேபோல பசுவக்கல் பகுதியில் மண்ணில் வீடுகள் புதைவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். அதேபோல, உள் மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அவலாஞ்சி மற்றும் பர்சன் பள்ளத்தாக்கு பகுதியில் மழை தொடரும். கோவையை பொறுத்தவரை சின்னக்கல்லாறு பகுதியில் மழை நீடிக்கும். இன்று தமிழகத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 190 மி.மீ (19 செ.மீ) அளவுக்கும், குறைந்தபட்சமாக கோவையின் பெரியபோது பகுதியில் 65 மி.மீ அளவுக்கும் மழை பெய்திருக்கிறது.
அப்பர் பவானி - 125 மி.மீ
சாம்ராஜ் எஸ்டேட் - 77 மி.மீ
கூடலூர் - 66 மி.மீ
குந்தா - 66 மி.மீ
மேல் கூடலூர் - 66 மி.மீ
கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரை
சின்னக்கல்லார் - 119 மி.மீ
பெரியகல்லாறு - 119 மி.மீ
மாக்கினாம்பட்டி - 113 மி.மீ
கீழ் நீரார் - 90 மி.மீ
சின்கோனா - 90 மி.மீ
சோலையார் அணை - 87 மி.மீ
பொள்ளாச்சி - 85 மி.மீ
வால்பாறை ஏஆர்ஜி - 84 மி.மீ
வால்பாறை பிஏபி - 76 மி.மீ
வால்பாறை தாலுகா அலுவலகம் - 70 மி.மீ
பெரியபோது - 65 மி.மீ
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பெரியாறு அணை பகுதியில் 112 மி.மீ., திருநெல்வேலி மாவட்டத்தில் நாலுமூக்கு பகுதியில் 72 மி.மீ., கொடுமுடியாறு 69 மி.மீ., ஊத்து 68., என மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல நீலகிரி மாவட்டம் பசுவக்கல் பகுதியில் வீடுகள் மண்ணில் புதைவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்குள்ள பகுதியில் விளை நிலங்களை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் 5 வீடுகள் மண்ணில் புதைய தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு வீட்டின் கால்வாசி பகுதி உடைந்து சரிந்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஊட்டி குடியிருப்புக்குள் புகுந்த கழுகு.. முதுகில் மர்ம கருவியைப் பார்த்து ஆடிப்போன மக்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications