பேருந்து மண் சரிவில் சிக்கிய விபத்து.. பஸ் டயர் பஞ்சர் ஆனதால் உயிர் தப்பிய 50 பேர்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தில் இருந்த நடத்துநர் உயிருடன் மீட்கப்பட்டார். அந்தப் பேருந்து டயர் சில நிமிடங்களுக்கு முன்பு பஞ்சர் ஆனதால், அதில் இருந்த 50 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். அதன் காரணமாக பயணிகள் மண் சரிவில் சிக்காமல் உயிர் தப்பியதாக நடத்துநர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு சாலைகளும் நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Nilgiris bus accident

குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் குன்னூரில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மண் சரிந்து விழுந்ததால் பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது. மேற்பகுதி உருக்குலைந்து நசுங்கியது. பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

காயமடைந்த நடத்துநர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பேருந்து டயர் சில நிமிடங்களுக்கு முன்பு பஞ்சர் ஆனதால், அதில் இருந்த 50 பயணிகள் இறக்கிவிடப்பட்டதாகவும், அதன் காரணமாக பயணிகள் மண் சரிவில் சிக்காமல் உயிர் தப்பியதாகவும் நடத்துநர் பேட்டி அளித்துள்ளார்.

கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்து, டயர் பஞ்சர் ஆனதால், அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு, மாற்று பேருந்தில் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பயணிகள் யாரும் இன்றி, ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் அந்தப் பேருந்து பஞ்சர் ஒட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது.

அப்போதுதான் பர்லியார் அருகே ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியுள்ளது. 50 பயணிகளுடன் பயணித்த பேருந்தில் சம்பவத்துக்கு சிறிது நேரத்துக்கு முன்புதான் பஞ்சர் காரணமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், நல்வாய்ப்பாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+