Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்றில் முதன்முறை.. நீலகிரி தோடர் பழங்குடி இன முதல் பல் டாக்டர் பாரதி.. தமிழக அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: தொழில்நுட்பம், விஞ்ஞானம் பெருகிய இந்த காலத்திலும், தோடர் பழங்குடி மக்களுக்கு கல்வி என்பது எளிதாக கிடைத்துவிடுவதில்லை.. பல கடினமான சூழலில் கல்வி கற்க வேண்டியிருக்கிறது.. குறிப்பாக மருத்துவர்கள் போதுமான அளவுக்கு இன்னும் வெளிவரவில்லை.. போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு எங்களுக்கு ஏற்படுத்தி தந்தால், தோடர் பழங்குடி இனத்திலிருந்தும் ஏராளமான மருத்துவர்கள் உருவாக வாய்ப்புள்ளது" என்று நீலகிரி மாவட்டத்தின் முதல் தோடர் இன பெண் பல் மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளர்.

"இந்த கால கட்டத்திலிருந்து வாழ்ந்து வருபவர்கள்" என்று திட்டமிட்டு சொல்ல முடியாதபடி, ஆண்டாண்டு காலமாக நீலகிரியில் வாழ்ந்து வருபவர்கள் தோடர் இன மக்கள்..!!

Womens Day 2025 Nilgiris Todas

தென்னிந்தியாவின் பழங்குடி இனங்களில் மிக முக்கியமானது தோடர் இனம். இவர்களது வாழ்க்கையும் சரி, அவர்களின் வழிபாட்டு முறைகளும் சரி, மிகவும் விநோதமாகவும், அதேசமயம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும், முறையான கட்டுப்பாடு கொண்டதாகவும் அமைந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

தோடர் இன மக்கள்

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றிய தோடர் இன மக்கள் இன்றும்கூட, அச்சுஅசல் மாறாத தடத்துடன் தங்கள் வாழ்க்கை முறையில் பயணித்து வருகிறார்கள்.. விஞ்ஞானம் , தொழில்நுட்பம் மலிந்துவிட்டபோதும்கூட, இவர்கள் இன்னமும் இயற்கையுடனேயே ஒட்டிக் கொண்டு, மகிழ்ச்சிடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பழமையான கலாச்சாரத்துடன், கட்டுப்பாட்டு குலையால் வாழ்ந்து வருகிறார்கள்.. பழங்குடி மக்களாக இருந்தாலும் சைவ உணவையே சாப்பிடக்கூடியவர்கள்.. இவர்களுக்கென பிரத்தியேகமான மொழியான தோடா மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்கள்.. தங்களுடைய உடைகளையும் தாங்களே வடிவமைத்து கொள்வார்கள்.

நீலகிரி மலைப்பிரதேசத்தில் சுமார் 2,000-த்திற்கும் அதிகமான தோடர் இனப் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கும் இந்த இன மக்களின் குழந்தைகள், சமீபகாலமாக கல்வி அறிவு பெறுவது அதிகரித்து வருகிறது... அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் என்கிற இளம்பெண் முதன்முறையாக பல் மருத்துவம் பயின்று, பல் டாக்டராகியிருக்கிறார்.

முதல் பெண் மருத்துவர்

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு, நம்முடைய Oneindia சேனலுக்காக, டாக்டர் பாரதியை சந்தித்து பேசினோம்.. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைகள்தான்,

"என்னுடைய பெயர் பாரதி.. நான் தோடர் சமுதாயத்தின் முதல் பெண் பல் மருத்துவர்.. என்னுடைய சமுதாயததில் பல ஆண்டு காலமாகவே மருத்துவர்கள் இல்லை.. கல்வி பயில்வதற்கான அடிப்படை வசதிகள் எங்களுக்கு கிடையாது.. போதுமான பஸ் வசதிகளும் எங்களுக்கு இருந்ததில்லை.. குடும்ப சூழல், வருமானமின்மை, கல்வி பற்றின விழிப்புணர்வு இல்லாதது போன்றவைகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

Womens Day 2025 Nilgiris Todas

என்னுடைய அப்பாதான் காரணம்

இன்றளவும்கூட பெருமளவு சாலை வசதிகள் எங்களுக்கு இல்லை. எனினும், இந்த கடினமான சூழலிலும் நான் பல் மருத்துவம் படிக்க காரணமே என்னுடைய அப்பாதான்.. அவரது பெயர் மந்தேஷ் குட்டன்.

என்னுடைய சமுதாயத்தில், கல்வி பரவலாக போய் சேர வேண்டும், கல்வி வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்னுடைய அப்பா ஆசைப்பட்டார்.. ஒவ்வொருவரிடமும் இதை சொல்லி புரியவைப்பதைவிட, தன்னுடைய குடும்பத்திலேயே, பெண்ணை படிக்க வைத்தால், தன்னுடைய மகளை பின்பற்றி பலரும், அவரவர் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வருவார்கள் என்று நினைத்தார்.. அதனால்தான் என்னை மருத்துவம் படிக்க வைத்தார்.

தமிழக அரசுக்கு கோரிக்கை

நான் பல் மருத்துவம் முடித்த 4 வருடங்கள் ஆகிவிட்டன.. ஆனாலும் எனக்கு பிறகு வேறு யாரும் பல் மருத்துவராக வரவில்லை.. இதற்கு காரணம், தோடர் இன மக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சாலை வசதிகள் இல்லை.. எங்கள் இனத்திற்கென வருமானமும் பெரிதாக கிடைப்பதில்லை..

அதேபோல, நீட் என்ற விவரம் மிக முக்கியமான காரணமாக உள்ளது.. இவைகளை களைய அரசு நடவடிக்கை மேற்கொண்டால், என்னுடைய தோடர் பழங்குடியிலிருந்து, என்னை போலவே இன்னும் பல மருத்துவர்கள் வெளிவருவார்கள் என்று நம்புகிறேன்.. அனைத்து பெண்களுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+