கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. நேரில் ஆஜராகாத குற்றவாளிகள்.. நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு
ஊட்டி: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை பிப். 9ஆம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் இருக்கிறது. கோடைக் காலங்களில் இந்த கோடநாடு பங்களாவில் தான் ஜெயலலிதா ஓய்வெடுப்பார்.

ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த 2017இல் இந்த கோடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இந்த சம்பவத்தைச் செய்ததாகக் கூறப்பட்டது.
கோடநாடு வழக்கு: இருப்பினும், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தும் முன்பே, கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டத்தில் செசன்ஸ் கோர்ட்டில் நடந்த வரும் நிலையில், இடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதற்காக 49 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. முன்பு நடந்த விசாரணையில் 4 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சமர்ப்பித்திருந்தனர். கடந்த 10 மாதங்களாக இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இதுவரை 189 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
விசாரணை: செல்போன் டவரில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.. அப்போது யார் யாருடன் பேசினார்கள் உள்ளிட்ட தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதற்காக கனகராஜின் செல்போனையும் போலீசார் குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி இருந்தனர். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்த பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் தரவுகள் குறித்து ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறியே கூடுதல் அவகாசம் கோரியிருந்தனர்.
இந்தச் சூழலில் நேற்று மாலை கோடநாடு வழக்கு தொடர்பாக 8 ஆயிரம் பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஆய்வகத்தின் தகவல்களைப் பெற்று சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். குற்றவாளிகளின் செல்போன் மற்றும் சிம்கார்ட் குறித்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இருப்பினும், முக்கிய குற்றவாளிகள் 10 பேரில் 3 பேர் மட்டுமே நேரில் நேரில் ஆஜராகினர். இதன் காரணமாக வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை பிப். 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை நீதிமன்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் அடுத்த முறை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications