Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கர சத்தம்.. உதகை மலை ரயில் திடீரென தடம் புரண்டதால் அலறிய பயணிகள்.. குறுக்கே எருமை! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: உதகை அருகே மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயிலின் ஒரு பெட்டி இன்று திடீரென தடம் புரண்டது. இதனால், ரயில் பயணம் செய்த பயணிகள் அலறினர். தண்டவாளத்தில் நடந்து சென்ற எருமைகள் மீது ரயில் மோதியதால் தடம் புரண்டதாக தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் (ஊட்டி) வரை நீலகிரி மலை ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.10க்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பி பகல் 12.30 மணிக்கு ஊட்டியை சென்றடையும். இந்த மலை ரயிலில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பயணிப்பது வழக்கம்.

Ooty hills train derailed due to buffalo hit on the train

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மலை ரயில் கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை ரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண முடியும்.

இந்த நிலையில் இன்று காலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி மலை ரயிலில் சுமார் 220 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அந்த ரயில் உதகையை நெருங்கிக் கொண்டிருந்தது. உதகை ரயில் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெர்ன்ஹில் பகுதியில் மலை ரயில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு பெட்டி தடம் புரண்டது.

ரயிலில் ஏதோ பயங்கர சத்தத்துடன் மோதியதும், ரயில் ஒரு பக்கம் கவிழ்வது போல சென்றதும், ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறினர். இதையடுத்து, உடனடியாக மலை ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் தடம் புரண்டதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ஊட்டியை நெருங்கிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் குறுக்கே தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமைகள் வந்துள்ளன. இதனைப் பார்த்த மலை ரயில் என்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியுள்ளார். எனினும், ஒரு எருமை மீது ரயில் வேகமாக மோதியதில், அந்த எருமை அடிபட்டு உயிரிழந்துள்ளது. மற்றொரு எருமை காயமடைந்துள்ளது.

மேலும், மலை ரயில் பெட்டி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. இதனால், ரயில் பெட்டி தடம் புரண்டது. எனினும், ரயிலில் பயணித்த 220 பயணிகளுக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல் துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு பேருந்து மூலமாக உதகைக்கு அனுப்பி வைத்தனர்.

220 பேர் பயணித்த நிலையில் மலை ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எருமைகள் மோதி ரயில் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+