ஆபரேசன் கந்து வட்டி..நீலகிரியில் 14 பேரை தட்டி தூக்கிய போலீஸ்! பல லட்சம் பறிமுதல்!!
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தையும் வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கந்துவட்டி வசூல் செய்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும், கடந்த சில தினங்களாக கந்துவட்டி கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 42 இடங்களில் போலீசார் நடைபெற்ற அதிரடி சோதனையில், குன்னூர், கூடலூர், தேவாலா, கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கந்துவட்டிக் கொடுத்ததாக 7 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்துவட்டி கொடுக்கும் நபர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன
இதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராபர்ட் தலைமையில் காவல்துறையினர் இன்று நடத்திய திடீர் சோதனையில், உதகை, கொலக்கம்பை, கோத்தகிரி, கூடலூரில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்ததற்காக மேலும் 7 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5,47,100 ரூபாய் ரொக்கப் பணம், 18 காசோலை மற்றும் 11 பத்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரியில் ஒட்டுமொத்தமாக காவல்துறையினர் 83 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோன்று கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் 97898 00100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அம்மாவட்ட பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications