வாடகையாக வந்த மலை ரயில்.. மொத்தமா அள்ளிய "லண்டன்".. குன்னூர் குகைக்குள் யார் பாருங்க.. ஊட்டி ஹேப்பி
ஊட்டி: மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்து, பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.. மலை ரயிலை வாடகைக்கு எடுக்க முடியுமா?
மலைகளின் அரசியான நீலகிரியில், தொட்டபெட்டா, அவலாஞ்சி ஏரி, மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன..

இத்தனை இடங்கள் சுற்றிப்பார்க்க இருந்தாலும், ஊட்டிக்கு மலை ரயிலில் போக வேண்டும் என்பதே பலரது ஆசையாக உள்ளது.. குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய 2 இடங்களிலிருந்தும் ஊட்டிக்கு மலை ரயில் உள்ளது. இதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்வதுதான் சற்று ஸ்பெஷலான விஷயம்
சுற்றுலா பயணிகள்: மேட்டுப்பாளையம்- குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும், நூற்றாண்டு பழமை வாய்ந்த, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது என்பதால், இந்த மலை ரயிலில் பயணம் செய்யவே சர்வதேச சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
சாதாரண பாதையில் இருந்து கிளம்பும் இந்த ரயில், ஏறும்போது சாதாரண தண்டவாள பாதையோடு பற்கள் பொருந்திய சங்கிலி பாதையையும் சேர்த்துக்கொள்ளும். பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட இந்த தனித்துவமான பாதை 1899ல் இருந்து செயல்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே மிக செங்குத்தான அதே நேரம் மிக நீளமான மீட்டர் கேஜ் ரயில் பாதை என்ற சிறப்பும் இதற்கு உண்டு. அதனால்தான், வெளிநாட்டு பயணிகள் இங்கு வரும்போது, மலை ரயிலையே மொத்தமாக வாடகைக்கு எடுத்து கொள்வார்கள்.
வாடகைக்கு ரயில்: இப்படித்தான், சமீபத்தில்கூட, இங்கிலாந்தில் இருந்து வந்த 1 குழு ஊட்டி நீராவி மலை ரயிலை ரூ.3 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்திருந்தனர்.. மலை ரயிலில் பயணித்தபடி ஊட்டி மலை, பள்ளத்தாக்கு, அருவிகள் அனைத்தையும் கண்டுகளித்தனர்.
நேற்றைய தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து வந்திருந்தார்கள்.. அதாவது, இங்கிலாந்தை சேர்ந்த 12 பேர், ஆஸ்திரேலியாவில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 சுற்றுலா பயணிகள், 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி மேட்டுப்பாளையம்- குன்னுார் வரை மலை ரயிலை நேற்று தனியாக வாடகைக்கு எடுத்து வந்தனர்.
குகைகள் வீடியோ: அவர்கள், நேற்று காலை, ஹில்குரோவ், ரன்னிமேடு மலை ரயில் நிலையங்களில் இறங்கி அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்தனர்.. பிறகு, ஆங்கிலேயர்கள் அமைத்த பாலங்கள், குகைகளில் மலை ரயில் செல்வதை வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.. நூற்றாண்டு பழமை வாய்ந்த பாலங்களில் நடந்து சென்று குதூகலம் அடைந்தனர்.
சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்த, "டெல்லி டிராவல் பால்ஸ்" இந்தியா நிறுவன இயக்குனர் அமீத் சோப்ரா இதுகுறித்து சொல்லும்போது, "ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த, MNR என்று அழைக்கப்படும், நீலகிரி மவுண்டன் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிநாட்டு பயணிகள் வந்தனர்.
வாய்ப்பு: இதற்காக, மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை, 6 லட்சம் ரூபாய் செலுத்தி மலை ரயிலை எடுத்து வந்தோம்.. ஒருவேளை இந்த கட்டணம் குறைக்கப்பட்டால், மேலும் பல சுற்றுலா பயணிகளை அழைத்து வர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார். இன்னும் 3 மாதங்களில் நீலகிரியில் கோடைகால சீசன் துவங்கும் என்பதால், மலைரயில் வாடகைக்கான கட்டணம் குறைக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
மலை ரயிலில் பயணிக்க நாம் முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம். இந்திய ரயில்வே இணையதளமான www.irctc.co.in மூலம் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
மொத்தப் பயண தூரம், இடைப்பட்ட நிறுத்தங்கள், பயண நேரம் ஆகியவற்றுக்கு ஏற்ப வாடகைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறினால் தனியார் நிறுவன வைப்புத் தொகையிலிருந்து அதற்காக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
சுத்தமான ரயில்: யார் வாடகைக்கு எடுக்கிறார்களோ அவர்கள் தங்கள் பெயரை ரயிலில் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ரயிலின் பெட்டிக்கோ, அதன் மீதான பெயிண்ட்டுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வாடகைக்கு எடுப்பவர்களிடமிருந்து அதற்குத் தனியே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எப்படி ரயிலை ஒப்படைத்தோமோ அப்படியே ரயிலைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ரயில் தூய்மையாக இல்லாவிட்டால் அதற்கும் கட்டணம் செலுத்த நேரிடுமாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications