கோத்தகிரியில் குழிக்குள் விழுந்த இளைஞர்.. கொட்டிய மழை.. தொடர் மண் சரிவு.. திக் திக் சம்பவம்
கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே புதையலைத் தேடி போன இளைஞர் 20 அடி குழிக்குள் விழுந்து உயிருக்குப் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் பலத்த மழை மற்றும் மண் சரிந்து கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினர் இளைஞரை மீட்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் மலையாள திரைப்படம் கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம்பிடித்திருந்தது. கிட்டத்தட்ட நண்பர்களின் பிரெண்ட்ஷிப் ஆந்தம் என்கிற வகையில் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.

கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள மஞ்சுமல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்வார்கள். அங்கு கமல்ஹாசனின் குணா படப்பிடிப்பு நடந்த இடமான குணா குகையில் குழிக்குள் நண்பர்களில் ஒருவர் சிக்கிக் கொள்வார். அவரை நண்பர்கள் சேர்ந்து எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதைப் பதைபதைக்கும் காட்சிகளுடனும், அதேசமயத்தில் நகைச்சுவையுடனும் கலந்து நெகிழ்வாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில், கோத்தகிரி அருகே 20 அடி குழிக்குள் இளைஞரை கொட்டித் தீர்த்த மழை, தொடர் மண் சரிவு, இருள் சூழ்ந்த சூழ்நிலைக்கிடையே தீயணைப்புத் துறையினர் போராடி உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பங்களாபாடி பழங்குடியின கிராமத்தில் வெள்ளை என்பவருக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீடு நீண்ட காலமாக பயன்பாடற்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், அந்த வீட்டின் மையப் பகுதிக்குள் இருந்த 20 அடி குழிக்குள் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து வெளியே வர இயலாமல் உயிருக்கு போராடி வருவதாக கோத்தகிரி தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இளைஞரை 20 அடி குழிக்குள் இருந்து மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்தக் குழி மிகவும் குறுகியதாக இருந்தது. இதனால், குழிக்குள் இறங்கும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால் தீயணைப்பு வீரர் ஆக்சிஜன் பொருத்திக் கொண்டு குழிக்குள் இறங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குழிக்குள் தொடர்ந்து மண் சரிவு மற்றும் இருள் சூழ்ந்து கொண்டிருந்ததாலும், மழை பெய்து கொண்டே இருந்தாலும் தீயணைப்புத் துறையினரின் மீட்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் சுமார் 2 மணி நேரம் போராடி அந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து, அந்த இளைஞரை சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சோலூர்மட்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குழிக்குள் விழுந்த இளைஞர் சுப்பிரமணி என்பது தெரியவந்துள்ளது.
பயன்பாடற்றுக்கு கிடந்த வீட்டில் புதையல் ஏதேனும் உள்ளதா?. யாரேனும் குழியை தோண்டி இருப்பார்கள் என்று நினைத்து எட்டிப் பார்த்தபோது சுப்ரமணி குழிக்குள் தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications