ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் நேரில் ஆஜர்.. ஜாமீன் தொடர்பான வழக்கு 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஊட்டி: கொடநாடு மர்ம கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த ஜாமீன் வரும் 2-ம் தேதி வரை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராக உத்தரவு
ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, சயான், மனோஜ் இருவரும் வருகிற 29-ந்தேதி அதாவது இன்றைய தினம் சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

மேல்முறையீடு
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சயான், மனோஜ் இருவரும் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட்டும், விசாரணைக்கு 2 பேரையும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து, மனோஜ், சயான் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

பிப்ரவரி 2-ம் தேதி
அப்போது சயான், மனோஜ் மீதான ஜாமீனை ரத்து செய்யக்கோரும் போலீஸ் மனு மீதான விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

பலத்த பாதுகாப்பு
மேலும் இறுதி வாதத்தை வரும் 2-ம் தேதி எடுத்து வைக்க வேண்டும்' என்றும் சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்திலிடம் நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சயான், மனோஜ் ஆகியோர் காரில் அழைத்து செல்லப்பட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications