நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போது பள்ளிகளை திறக்கலாமா.. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பதில்

Google Oneindia Tamil News

ஊட்டி: வரவிருக்கும் மூன்றாவது அலை தொற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது அவசியமான ஒன்று என்று ஆதரவு தெரிவித்தார்.

Recommended Video

    Radhakrishnan விளக்கம் | Nipah Virus | School மீண்டும் மூடப்படுமா? | Oneindia Tamil

    கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்துவிட்ட போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொற்று அங்கு குறையவில்லை.

    இதனிடையே கேரளாவைப்போல் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா என அடுத்தடுத்து மாநிலங்களில் 3வது அலை பரவுமா என்ற அச்சம் காணப்படுகிறது. மூன்றாவது அலை அக்டோபர் இறுதியில் உச்சம் பெறலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன இதனால் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசை கண்டித்து செப். 20ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: ஸ்டாலின் போட்ட அதிரடி ட்வீட்மத்திய அரசை கண்டித்து செப். 20ல் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்: ஸ்டாலின் போட்ட அதிரடி ட்வீட்

    சௌமியா சுவாமிநாதன்

    சௌமியா சுவாமிநாதன்

    இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஆனைகட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் ஞாயிறு அன்று ஆய்வு மேற்கொண்டார். பழங்குடியின மக்களின் உடல்நிலை, வாழ்வாதார சூழல் உள்ளிட்டவைகள் குறித்து அந்த மக்களிடமே கேட்டறிந்தார்.

    பள்ளிகள் திறப்பு அவசியம்

    பள்ளிகள் திறப்பு அவசியம்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் கல்வி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா

    கொரோனா

    குறிப்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றனர். ஒரு வேளை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

    மூன்றாவது அலை

    மூன்றாவது அலை

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. மேலும் இருக்கக்கூடிய மக்களுக்கும் இரண்டு தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தி விட்டால் மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கலாம். பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதார முறைகளைக் கையாள்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட செயல் முறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அலை தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்" இவ்வாறு சௌமியா சுவாமிநாதன் கூறினார்.

    English summary
    World Health Organization Chief Scientist Soumya Swaminathan support schools open. People may be safer if they pay two installments of the vaccine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X