55 வயசு கராத்தே மாஸ்டர்.. மாணவியிடம் அத்துமீறல்.. புகார் தந்த மகளை அடித்த தந்தை, சித்தப்பாக்கள்

மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

கூடலூர்: 55 வயசு கராத்தே மாஸ்டர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இது சம்பந்தமாக போலீசில் புகார் அளிக்கவும், பெற்ற தந்தையே மகளை கண்மூடித்தனமாக அடித்துள்ள கொடுமை கூடலூரில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாபு ஆபிரகாம். இவர் ஒரு கராத்தே பயிற்சியாளர். கூடலூரில் தனியாக கராத்தே பயிற்சி மையத்தை வைத்து நடத்தி வருகிறார்.

sexually abusing 11th standard student by karate teacher

இவரிடம் கூடலூர் விமலகிரி பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி பயிற்சி பெற்று வந்துள்ளார். பள்ளியிலும், பயிற்சி மையத்திலும் இவர்தான் கராத்தே டிரெயினர்.

ஆனால், மாணவியிடம் மாஸ்டர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயாரோ, பள்ளி நிர்வாகம் மற்றும் தேவலாய கமிட்டியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மகளே கூடலூர் போலீசாரிடம் பாலியல் புகார் அளித்தார். போலீசில் இப்படி புகார் தந்துவிடவும், ஆத்திரம் அடைந்தார் மாணவியின் அப்பா. இப்படி ஸ்டேஷன் வரை புகார் சென்றால் குடும்ப மானமே போய்விடும் என்று ஆவேசப்பட்டுள்ளார்.

அதனால், பெற்ற மகள் என்றுகூட பார்க்காமல், மகள், மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார். மேலும் புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டி உள்ளார். இதில், மாணவி படுகாயமடைந்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்தும் கூடலூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சாபு ஆபிரகாமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பாலியல் புகார் தந்த மகளை தாக்கியதாக அவரது அப்பா, 2 சித்தப்பாக்கள், இவர்களுக்கு ஆதரவாக வந்த 4 பேர் என மொத்தம் 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+