புலியை சுட்டு கொல்ல வேண்டாம்.. ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு
மசினகுடி அருகே புலியை தேடும் பணி இன்றும் தொடர்கிறது
நீலகிரி: நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று மனிதர்களை அடித்து கொன்றுவிட்டது.. இதுவரை 4 பேரை தாக்கி கொன்றுள்ளது.. ஏகப்பட்ட கால்நடைகளையும் பலிவாங்கி உள்ளது.
இதனால் ஆட்கொல்லி புலியை பிடிக்க அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததையடுத்து, புலியை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்...

நிபந்தனை
ஆரம்பத்தில் மயக்க ஊசி செலுத்தியே புலியை பிடிப்போம் என்றார்கள்.. பொதுமக்கள் சுட்டுக் கொன்று பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவும், அதன்படியே சுட்டுக் கொல்ல முடிவானது.. ஆனால், இதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டெல்லியை சேர்ந்த விலங்கியல் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் ஒரு மனுவை தாக்கல் செய்தார்...

ஆட்கொல்லியா?
அந்த மனுவில், 11(1)(a) சட்டப்பிரிவின் கீழ் சுடுவதற்கு ஆணை பிறப்பித்த அதிகாரிகள் அதற்கான சீரான வழிமுறைகளை பின்பற்றவில்லை.. அந்த மனுவில், முதலில் இந்த புலி ஆட்கொல்லி புலியா, 4 பேரையும் கொன்றது இந்த புலி தானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை... இந்த செயல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளுக்கு புறம்பான ஒன்று...

விசாரணை
சீரான அளவில் மயக்க ஊசி செலுத்தி T23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும், பிடித்த உடன் புலியை முதுமலை புலிகள் சரணாலயம் அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்... அதேபோல பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் என்று இதே கோரிக்கையை வைத்திருந்தார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் புலியை சுட்டு பிடிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டிருந்தார்.

அனுமதி மறுப்பு
அதேசமயம், புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்று தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு ஆர்வலர் சங்கீதா தாக்கல் செய்த மனுவானது, இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரியில் தேடப்பட்டு வரும் புலியை கொல்ல வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

தீவிரம்
ஆட்கொல்லி புலியாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கக்கூடும், எனவே சுட்டுக்கொல்ல வேண்டாம் என தலைமை நீதிபதி வலியுறுத்தினார். அப்போது, வனத்துறை சார்பாக ஆஜரான அரசு பீளிடர் முத்துகுமார், நீலகிரியில் உலவும் எம்.டி.டி. 23 புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை என்றும் புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்..

இடையூறு
இதையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், புலியை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு செய்ய கூடாது, மேலும் புலியை பிடிப்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரனையை இரண்டு வாரங்கள் தள்ளிவைத்தனர்.. தற்போது புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணி தீவிரமாகி உள்ளது. 6 கால்நடை மருத்துவ குழு தனித்தனி குழுக்களாக பிரிந்து, பழங்குடியினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை இன்று பிடித்துவிடுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications