புலியின் கால்தடம் தெரிந்தது.. சிங்காரா பகுதியில் சுற்றிவளைப்பு.. இன்று மாலைக்குள் பிடிக்க தீவிரம்
மசினகுடி அருகே புலியை தேடும் பணி இன்றும் தொடர்கிறது
நீலகிரி: T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி 11-வது நாளாக இன்று நடந்து வருகிறது.. இதனிடையே, புலியின் கால்தடத்தை மோப்ப நாய் கண்டுபிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று மனிதர்களை அடித்து கொன்றுவிட்டது.. இதுவரை 4 பேரை தாக்கி கொன்றுள்ளது.. ஏகப்பட்ட கால்நடைகளையும் பலிவாங்கி உள்ளது.
இதனால் ஆட்கொல்லி புலியை பிடிக்க அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததையடுத்து, புலியை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்...

நிபந்தனை
மயக்க ஊசி செலுத்தியே புலியை பிடிப்போம் என்றார்கள்.. பொதுமக்கள் சுட்டுக் கொன்று பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவும், அதன்படியே சுட்டுக் கொல்ல முடிவானது.. ஆனால், இதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டெல்லியை சேர்ந்த விலங்கியல் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர், ஆன்லைன் மூலம் ஒரு மனுவை தாக்கல் செய்தார்...

விதிகள்
அந்த மனுவில், முதலில் இந்த புலி ஆட்கொல்லி புலியா, 4 பேரையும் கொன்றது இந்த புலி தானா என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை... இந்த செயல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளுக்கு புறம்பான ஒன்று... சீரான அளவில் மயக்க ஊசி செலுத்தி T23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும், பிடித்த உடன் புலியை முதுமலை புலிகள் சரணாலயம் அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

விசாரணை
இந்த மனு இன்று விசாரணைக்கு வரஉள்ளது.. அந்த முடிவில்தான் புலியை சுட்டுக் கொல்வதா? இல்லையா என தெரியவரும். ஆனால், ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்க திட்டம். புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்று தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.

யானைகள்
அதேசமயம், புலியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. மாலை 6 மணி வரை புலியை தேடும் பணி நடக்கிறது.. அதற்கு மேல் புலியை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.. சீனிவாசன், உதயன் ஆகிய இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.. அதே போல், புலியை பிடிக்க ஸ்பெஷல் டிரெயினிங் தரப்பட்ட மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டுள்ளது. டைகரும் பணியில் இறக்கப்பட்டது.

குழுக்கள்
மோப்பநாய் டைகர் புலியின் கால் தடத்தை கண்டுபிடித்துவிட்டது.. இதையடுத்து, வனப் பகுதியை சுற்றி வசிக்கும் கிராம மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் 6 கால்நடை மருத்துவ குழு தனித்தனி குழுக்களாக பிரிந்து, பழங்குடியினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை இன்று பிடித்துவிடுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications