ஊட்டிக்கு ஹனீமூன் போறீங்களா.. அப்போ முதல்ல இத தெரிஞ்சுக்கோங்க!! கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன
நீலகிரி: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரியில் உள்ள தலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 9000ஐ நெருங்குகிறது.

கட்டுப்பாடுகள்
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரியிலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

என்ன காரணம்
நீலகிரியில் அமைந்துள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்குக் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி 10 நாட்களில் மட்டும் 1.06 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். இந்தளவு அதிகப்படியான நபர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கடினம். எனவே வைரஸ் பாதிப்பு உயரும் வாய்ப்புகள் அதிகம். இதைக் கருத்தில் கொண்டே நீலகிரியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

நேரக்கட்டுப்பாடு
அதாவது நீலகிரியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்கள் காலை 10 முதல் பகல் 3 வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதேபோல உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்துக்குப் பகல் 3 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை
ஏற்கனவே, நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி இல்லை. அன்று அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications