உன் சேட்டையை என்கிட்ட காட்டாத..ஒழுங்கா ஓடி போயிரு.! காண்டான காட்டு யானை..சிங்கிளாய் விரட்டிய நாய்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் சாலையில் ஆக்ரோசமாக ஓடி வந்த காட்டு யானையை தெரு நாய் ஒன்று குரைத்தே காட்டுக்குள் விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் மான்கள் புலி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது கோடை காலம் நிலவிவரும் நிலையில் வனப்பகுதிகளை கடும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காட்டு யானை: இதை அடுத்து மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதிகள் யானைகளும் அதிக அளவில் வசிப்பதால் அவை அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூடலூர் தொரப்பள்ளி குடியிருப்பு பகுதிகளில் புகுகின்றனர்.
வனத்துறை: அவ்வாறு வரும் யானைகள் விவசாய பயிர்களையும் மக்கள் வசிக்கும் வீடுகளையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் அகழி அமைத்திருந்தாலும் சில யானைகள் அகழியை கடந்து இரவில் ஊருக்குள் புகுந்து மீண்டும் காலையில் வனதிற்கு செல்வதை விளக்கமாகக் கொண்டுள்ளன.
ஊருக்குள் புகுந்த யானை: இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் அதனை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையை நாய் ஒன்று குரைத்தே காட்டுக்குள் விரட்டி அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முதுமலை காட்டுப்பகுதியில் இருந்து தொரப்பள்ளி குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்தது.
விரட்டிய நாய்: காலை நேரத்தில் மைசூர் சாலையில் இந்த காட்டு யானை ஆக்ரோசத்துடன் சென்றது. இதனால் சாலையில் சென்றவர்கள் தெறித்து ஓடிய நிலையில் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய் ஒன்று காட்டு யானையை பார்த்து குரைத்து விரட்டியது. இதனால் பயந்து போன அந்த யானை அங்கிருந்து வேகமாக ஓடியது. இருந்தும் அந்த நாய் அந்த யானையை விடாமல் துரத்தியது. தொரப்பள்ளி வன சோதனை சாவடியை கடந்து முதுமலை வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றதும் நாய் சாதரணமாக ஊருக்குள் வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications