நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெலிங்டன் கண்டோன்மென்ட் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா திடீர் சஸ்பெண்ட்! காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட உடுமலை கவுசல்யா- வீடியோ

    குன்னூர்: வெலிங்டன் கண்டோன்மென்ட் பணியிலிருந்து உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். பட்டியலினத்தை சேர்ந்த இவரை கவுசல்யா காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில், கவுசல்யா குடும்பத்தினரால் உடுமலை நகரில் வைத்து பட்டப்பகலில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில், காயங்களுடன் கவுசல்யா உயிர்தப்பினார்.

    சங்கர் அறக்கட்டளை

    சங்கர் அறக்கட்டளை

    இதையடுத்து கவுசல்யா, சங்கர் பெயரில் சமூகநீதி அறக்கட்டளை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார். பெரியாரிய கருத்துக்களை பரப்பினார். பறை இசை கற்றுக்கொண்டார்.

    அரசு உதவிகள்

    அரசு உதவிகள்

    இதனிடையே, ஜாதி மறுப்பு திருமணம் செய்து பாதிக்கப்பட்ட கவுசல்யாவிற்கு அரசு சார்பில் உதவிகள் குவிந்தன. குடிசையாக இருந்த சங்கர் வீடு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் புதிதாக கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் சங்கரின் தந்தைக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல், கவுசல்யாவுக்கு குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் கிளர்க் பணி வழங்கப்பட்டது.

    மறு திருமணம்

    மறு திருமணம்

    இந்த நிலையில் சமீபத்தில், கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசை கலைஞரான சக்தி என்பவரை ககவுசல்யா மறுமணம் செய்து கொண்டார். சக்தி தொடர்பான சர்ச்சைகளால் சில தரப்பிலிருந்து இந்த திருமணம் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், கவுசல்யா மற்றொரு சர்ச்சையில் சிக்கினார்.

    நாட்டுக்கு எதிரான பேச்சு

    நாட்டுக்கு எதிரான பேச்சு

    ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு கவுசல்யா பேட்டி அளித்தபோது இந்திய இறையாண்மைக்காக எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து கன்டோண்மென்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Udumalai gowsalya suspended from Cantonment job for speaking against Indian sovereignty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X