வெளியே சாப்பாடு கிடைக்கலைங்க.. ஜாமீனை ரத்து பண்ணி சிறைக்கு அனுப்புங்க.. "கொடநாடு" வாளையார் மனோஜ் மனு
உதகமண்டலம்: உணவு, தங்கும் இடம் இல்லாததால் ஜாமீனை ரத்து செய்துவிட்டு தன்னை மீண்டும் சிறைக்கே அனுப்பிவிடுமாறு கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரை கொலை செய்தது.

கொள்ளை
பின்னர் பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிகிறது. இந்த பங்களாவுக்கு என்ன கொள்ளையடிக்கப்பட்டது, எப்படி கொள்ளையடிக்கப்பட்டது போன்ற விஷயங்கள் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த கொலை, கொள்ளைகளுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

10 பேர் கைது
இந்த வழக்கில் கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள வாளையார் மனோஜ் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

மனோஜ் மனுத்தாக்கல்
இந்த நிலையில் அவருக்கு கடந்த நவம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இவர் உதகையில் தங்கியிருந்து வாரம்தோறும் திங்கள்கிழமை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யுமாறு மனோஜ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

உணவு
இதுகுறித்து அந்த மனுவில் அவர் கூறுகையில் தங்குவதற்கு இடமும் உணவும் கிடைக்கவில்லை என்பதால் தனது ஜாமீனை ரத்து செய்துவிட்டு சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உதகை மாவட்ட நீதிமன்றம் நாளை விசாரணையை நடத்தவிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications