நீலகிரி அரசு பஸ் டிரைவர் வீட்டில் அதிர வைக்கும் சம்பவம்.. ஊட்டி விமலாவின் வில்லங்கமான வேலை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் அரசு பஸ் டிரைவர் ஆவார். இவரது மனைவி விமலா ராணி.. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முரளி அட்டி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அரசு பஸ் டிரைவரான முரளிக்கு தனது மனைவி விமலா ராணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம் மொத்த நீலகிரியையும் அதிர வைத்துள்ளது.
கணவன் மனைவி இடையே சந்தேகம் என்ற ஒன்று வந்தால் அது வாழ்க்கையில் புயலாக மாறும்.. கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ சந்தேகப்பட்டால் அல்லது அந்த சந்தேகம் உண்மையாகும் பட்சத்தில் அவர்கள் வாழ்வில் ஒன்று விவாகரத்து நடக்கும் அல்லது விபரீதம் நடக்கும்..பெரும்பாலும் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் விவாகரத்தை விட வில்லங்கமான விஷயங்களே அதிகமாக நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முரளியின் குடும்பத்தினர் சேரங்கோடு பகுதியில் வசித்து வந்தவர் முரளி..இவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார்.இவர் தற்போது அட்டி என்ற பகுதியில் குடும்பத்துடன் குடியேறி வசித்து வந்தார். முரளியின் மனைவி விமலா ராணிக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
முரளிக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளதாம். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முரளி விமலா ராணி தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விமலா ராணி, வீட்டில் இருந்த பெயிண்டுக்கு பயன்படுத்தும் தின்னரை முரளி உடல் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் கண் இமைக்கும் நேரத்தில் முரளியின் உடலில் தீ பற்றி எரிந்து உள்ளது. இதனால் முரளி வலி தாங்க முடியாமல் துடித்திருக்கிறார். முரளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் முரளி இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக முரளியை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி முரளி இறந்தார்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) துரைபாண்டி மற்றும் போலீசார் விமலா ராணியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு முரளி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், நேற்று நடந்த தகராறில் அவரை மனைவி தீ வைத்து எரித்து கொன்றதும் தெரியவந்தது. இதனை விமலா ராணி ஒப்புக்கொண்டாராம். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, விமலா ராணியை தேவாலா போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications