குலுங்கி குலுங்கி அழுது.. "ஸ்பேனரால் ஒரே போடு".. நடுங்கும் நீலகிரி.. டிஜிபி சைலேந்திர பாபுவின் அதிரடி
ஊட்டி: நடுக்காட்டுக்குள் 14 வயது சிறுமி சீரழிக்கப்பட்டிருக்கிறாள்.. சிதைக்கப்பட்டிருக்கிறாள்.. துடிதுடித்தே அந்த பிஞ்சுவின் உயிர் பிரிந்துள்ளது.. இதுகுறித்து குற்றவாளியின் வாக்குமூலமானது, நீலகிரியையே நடுங்க வைத்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ளது பழங்குடியின கிராமம்.. இங்கு வசித்து வரும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி, ஊட்டியில் ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

இவருக்கு 14 வயதாகிறது.. இப்போது ஸ்கூலில், இறுதித்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.. கடந்த 24-ந்தேதி ஸ்கூலுக்கு போன மாணவி, சாயங்காலம் வீட்டுக்கு வரவில்லை.. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் சிறுமியைத் தேடியிருக்கிறார்கள்.
காட்டுப்பகுதி: அப்போது, அங்கிருந்த அங்கர்போர்டு என்ற காட்டுப்பகுதியில், சந்தேகத்துக்குரிய வகையில் வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பதறியடித்துக் கொண்டு, உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி சடலமாக கிடந்திருக்கிறார்.. இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதனர் குடும்பத்தினர்.. மாணவி அணிந்திருந்த ஸ்கூல் யூனிபார்ம், அவிழ்க்கப்பட்டிருந்ததாம்.
இந்த சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் சிக்கினார்.. 25 வயதாகிறது.. கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்தவர்.. அந்த கார் இவருக்கு சொந்தமானதுதானாம்.. இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலையும் செய்தது தெரியவந்தது. ரஜ்னேஷ் குட்டன் அங்கு வந்திருக்கிறார்.. இவரும் அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. சம்பவத்தன்று, மதுபோதையில் காரை ஓட்டி வந்திருக்கிறார்.. சிறுமியிடம் காரை நிறுத்திவிட்டு, "காரில் ஏறு... வீட்டில் போய் கொண்டு விட்டு விடுகிறேன்" என்று சொல்லி அழைத்துள்ளார்..
வாக்குமூலம்: கஞ்சா போதையும் காமத்தீயும் சேர்ந்துகொள்ள, பிஞ்சுவின் உயிர் நடுக்காட்டிலேயே துடிதுடித்து பிரிந்துள்ளது.. உடம்பெல்லாம் சிதைக்கப்பட்டிருந்தது.. இப்போது, போலீசார் பிடியில் ரஜ்னேஷ்குட்டன் சிக்கி உள்ளதுடன், வாக்குமூலம் ஒன்றையும் தந்துள்ளான்.. அதில், "காட்டுக்குள் கடத்தி சென்றதுமே எல்லாம் முடிந்துவிட்டது.. பிறகு, நடந்ததை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் என்று அந்த சிறுமியிடம் எவ்வளவோ கெஞ்சினேன்.. ஆனால் அவள் ஒத்துக்கொள்ளவில்லை.. எனக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அதனால், இரும்பு ஸ்பேனரால் ஒரே போடு போட்டேன்... செத்துப் போயிட்டா" என்று கூலாக சொன்னாராம் ரஜ்னேஷ்..
இந்த பலாத்கார கொலை சம்பவமானது, மிக முக்கிய பிரச்சனை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது.. குற்றவாளி ரஜ்னேஷ் கஞ்சா போதையில் எந்நேரமும் திரிந்து வந்துள்ளதாக தெரிகிறது.. தங்கள் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதே மாணவி பலியாவதற்கு காரணமாகி உள்ளது என்று அந்த பகுதி பெண்கள் குலுங்கி அழுதவாறே சொல்லகிறார்கள்.. அத்துடன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.. கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர்.
சீரியஸ் பிரச்சனை: குற்றவாளி ரஜ்னேஷ் என்றில்லை.. இவரை போல இன்னொரு இளைஞர் குற்றவாளியாக மாறுவதற்கு முன்பு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற வலிய கோரிக்கையையும் விடுத்துள்ளது, நீலகிரி மாவட்ட போலீசாரின் கவனத்தை திருப்பி நிமிர வைத்துள்ளது.. அதனால், இந்த விஷயத்தை சீரியஸாகவே பார்க்க தொடங்கி உள்ளனர்.
நீலகிரி மட்டுமல்லாமல், நாடு முழுவதுமே, பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே முக்கிய காரணமாக உள்ளதாக போலீசாரே சொல்கிறார்கள்.. அத்துடன், சம்பந்தப்பட்ட ரஜ்னேஷூக்கு அதிகபட்சமாக தண்டனையை வாங்கி தருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எத்தனை தண்டனைகள் வாங்கி தந்தாலும், போன உயிர் திரும்பி வரப்போவதில்லைதானே?? இருந்தாலும், ஊட்டி மாணவியை போன்று இன்னொரு பிஞ்சு உயிரும் பறிபோய் விடக்கூடாது என்பதே அனைவரின் ஆழ்மனசு எண்ணமாக உள்ளது.
டிஜிபி சைலேந்திர பாபு: இதனிடையே, டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications