20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
நீலகிரி: நீலகிரியில் ஸ்ட்ராங்க் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் எல்லாம் முடிந்து அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டு வாரம் முன்பு 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு: மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. மாநிலத்தில் 69.71% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாகத் தர்மபுரியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது வாக்கு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட நட்சத்திர தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் முதலில் 72.09 சதவீதம், 2வது 69.46 சதவீதம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லை: கடந்த முறை தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த இடங்களில் எல்லாம் வெளியே கட்சியினர் காவலுக்கு நின்றனர். திமுக, அதிமுக, பாமக, விசிகவினர் காவலுக்கு நின்றனர். திமுகவினர்தான் அதிகமாக அப்போது காவலுக்கு நின்றனர். ஆனால் இந்த முறை அப்படி காவலுக்கு நிற்கும் வழக்கம் இல்லை. இந்த முறை அப்படி யாரும் எங்கும் காவலுக்கு நிற்கவே இல்லை
கடந்த முறை போல திமுக இந்த முறை பெரிதாக பாதுகாப்பிற்கு ஆள் அனுப்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் நீலகிரியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்து உள்ளது.
173 சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்து உள்ளன. இந்த கேமராக்கள் ஒரே நேரத்தில் வேலை செய்யாமல் போய் உள்ளன. 20 நிமிடங்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்ப கோளாறு அல்லது அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டு உள்ளார்.
திமுக பிளான்: நீலகிரியில் ஸ்ட்ராங்க் ரூம்-ன் சிசிடிவி செயல் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக நிர்வாகி எஸ்கேபி கருணா செய்துள்ள போஸ்டில், ஸ்டிராங் ரூம் கேமராக்களிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கண்காணிப்பு அறையில் உள்ள டிவிக்களுக்கு வரும் தொடர்புதான் தடைபட்டதே தவிர, Recording தடைபடவில்லை. அந்த 18 நிமிட நேரத்துக்கான காட்சிப் பதிவை கோரி மனு அளித்துள்ளோம். கவலையுடன் என்னிடம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி., என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications