ஊட்டி மலர் கண்காட்சியில் என்ன ஸ்பெஷல்? ஹாலந்து நாட்டின் டுலீப் மலர் தொடங்கி ஆயிரக்கணக்கான பூக்கள்!
நீலகிரி: ஊட்டியில் இன்று தொடங்கியுள்ள மலர் கண்காட்சியில் ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப் மலர்கள் தொடங்கி
ஆயிரக்கணக்கான பூச்செடிகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி புறப்படும் திட்டத்தில் இருப்பவர்கள்,நிச்சயம் அங்கு நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை பற்றி அறிந்தாக வேண்டும்.
அதன் விவரம் வருமாறு;

கோடைக்காலம்
கோடை காலத்தில் நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா
பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும்
நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த உதகை
மலர்க்காட்சி திடலில் வண்ண மலர்களான டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா
லில்லி மற்றும் மேரிகோல்ட் உள்ளிட்ட 275 வகை ரகங்கள் அடங்கிய வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி
மலர்க்காட்சி மாடத்திலுள்ள கொய்மலர்கள் அரங்கினையும், ஹெலிகோனியா மலர்
அலங்காரங்களையும், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப்
மலர் செடிகளையும், சுமார் 52 வகையான மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர்
மாடங்களையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்,
காட்டெருமை உள்ளிட்ட பிற அலங்காரங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

கார்னேசன் மலர்கள்
மேலும், குழந்தைகள், சுற்றுலாப்பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும்
கவரும் வகையில் சுமார் 4,500 தொட்டிச் செடிகளின் மூலம் அலங்கரிக்கப்பட்ட
கண்ணாடி மாளிகையினையும், நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான
பழங்குடி பெருமக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர், கோத்தர் மற்றும்
காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர்
அலங்காரத்தினையும், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, ஆந்தை, சுமார் ஒரு இலட்சம்
கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக மலர் அலங்காரத்தில்
அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்
கட்டடம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

200-ம் ஆண்டு
உதகை 200-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை நினைவு கூறும் விதமாக "Ooty
200" என்று மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மலர்களால்
வடிவமைக்கப்பட்டுள்ள "மீண்டும் மஞ்சப்பை" அலங்காரத்தையும், சுற்றுச்சூழல்
துறையின் சார்பில் பிளாஸ்டிகிற்கு மாற்றாக "மீண்டும் மஞ்சப்பை" பயன்பாடு
குறித்து அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார்
அரங்குகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

முதல்வர் பார்வை
நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை
வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும்
நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் காட்சித் திடல்களை முதலமைச்சர் கண்டு களித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications