Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்காகினும் பார்த்தது உண்டோ! ஆனைமலை காட்டில் ஒன்றாக ஒளி எழுப்பிய மின்மினி பூச்சிகள்.. சுவாரசியம்!

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் மின்மினி பூச்சிகள் ஒருசேர ஒன்றாக ஒளி எழுப்பும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது. வைட் எனப்படும் என்ஜிஓ குழுவின் ஆராய்ச்சியில் இந்த நிகழ்வு படம் பிடிக்கப்பட்டு உள்ளது.

வைட் என்று அழைக்கப்படும் Wild and Dark Earth (WiDE) என்று என்ஜிஓ குழுவின் இணை நிறுவனர்கள் சந்திசேகர் ரத்தினம், மதி துமிலன், ஸ்ரீதர் சீதாராமன் மற்றும் ஸ்ரீராம் முரளி ஆகியோரின் தொடர் ஆராய்ச்சி மூலம் மனம்பள்ளி காட்டில் நடந்த இந்த அரிய நிகழ்வு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

சுவாரசிய நிகழ்வு: நீங்கள் ஒரு அடர்ந்த காட்டில் நடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள்.. இரவு நேரம்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் குறைய.. உங்கள் கையிலோ டார்ச் இல்லை.. அந்த இருளான நேரத்தில் திடீரென மொத்த காடும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் வெளிச்சமாக மாறினால் எப்படி இருக்கும்? ஒரு நொடியில் லுமினன்ட் லைட் போட்டு காட்டிற்கு வெளிச்சம் போட்டது போல மாறினால் எப்படி இருக்கும்?

அட ப்ரோ.. இதெல்லாம் ராஜமௌலி படத்துல வேணா நடக்கும் நிஜத்தில் நடக்காது என்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது ஆனைமலையில் இருக்கும் மனம்பள்ளி காட்டில் நடந்து உள்ளது. அங்கே இருக்கும் மின்மினி பூச்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரே நேரத்தில் பார்ட்டி கொண்டாடுவது போல.. தனது பின்பக்கம் இருக்கும் லைட்டை எரியவிட்டு ஆராய்ச்சியாளர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளன.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

அங்கே இருக்கும் மரங்கள் எல்லாம் திருவிழாவில் தொங்க விடப்படும் சீரியல் லைட்ஸ் போல மினு மினுத்த சம்பவம் நிகழ்தேறி உள்ளது. அந்த காட்டையே கண்கொள்ளா காட்சியாக மாற்றி இருக்கும்.. இந்த நிகழ்விற்கு பின் கொஞ்சம் காதலும்.. கொஞ்சம் ஆபத்தும்.. நிறைய அதிசயமும் நிறைந்து இருக்கிறது என்கிறார்கள் வன ஆராய்ச்சியாளர்கள்... மின்மினி பூச்சிகள் இப்படி ஒன்றாக ஒளி எழுப்ப என்னதான் காரணம்?

ஒளி எழுப்பும் மின்மினி பூச்சிகள்: வீட்டில் திடீரென மின்சாரம் தடைபடும் நேரத்தில் இரவில் எப்போதாவது நாம் மின்மினி பூச்சிகள் பார்த்து இருப்போம். ஒன்று இரண்டை பார்ப்பதே மிகவும் கடினம். ஆனால் மனம்பள்ளி காட்டில் பல லட்சம் மின்மினி பூச்சிகள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ஒளி எழுப்பி உள்ளன. அதிலும் இவை ஒரே நேரத்தில் ட்யூன் செய்தது போல ஒளி எழுப்பி உள்ளன.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

இந்த காட்டில் நடக்கும் அதிசய நிகழ்வை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் எஸ் ராமசுப்ரமணியன், துணை இயக்குனர் பார்கவா தேஜா, துணை காப்பாளர் வி செல்வம் மற்றும் வைட் அமைப்பின் நிர்வாகிகள் சேர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். வைட் என்று அழைக்கப்படும் Wild and Dark Earth (WiDE) என்று என்ஜிஓ குழு மூலம் இவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆராய்ச்சியின் போதுதான் மின்மினி பூச்சிகளின் இந்த கொண்டாட்ட நிகழ்வை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கேமராவில் லாங்க் எக்ஸ்போசர் போட்டு இவர்கள் இங்கே எடுத்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் தரம்.. இந்த வருடம் மட்டுமின்றி கடந்த வருடமும் எஸ் ராமசுப்ரமணியன் மற்றும் வைட் அமைப்பின் ஸ்ரீராம் முரளி ஆகியோர் இதே நிகழ்வை உழண்டி காட்டு பகுதியில் பதிவு செய்துள்ளனர்.

வைட் அமைப்பின் இணை நிறுவனர்களான, சந்திசேகர் ரத்தினம் மற்றும் ஸ்ரீராம் முரளி ஆனைமலை காட்டில் இரவு பகலாக இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அமைப்புதான் ஆனைமலை காட்டு பகுதிகளில் விலங்குகளின் வாழ்வியல், அதில் ஏற்படும் மாறுபாடுகள், அதன் பன்முகத்தன்மை, அதன் வாழ்க்கை சுழற்சி என்று அனைத்தையும் ஆய்வு செய்து வருவது.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

சந்திசேகர் ரத்தினம் மற்றும் ஸ்ரீராம் முரளியின் கூற்றுப்படி.. பொதுவாக கோடைகாலத்தில் முதல் கோடை மழை பெய்ததும் இந்த மின்மினி பூச்சிகளின் முட்டைகள் மரங்களில் இருக்கும் ஈரமான பகுதிகளில் தோன்ற ஆரம்பிக்கும் . அதன்பின் லேசாக வளரும் மின்மினி பூச்சிகள் லார்வாக்களாக மாறும். அடுத்த ஒரு வருடம் இது லார்வாவாகவே இருக்கும்.

இவை முட்டையாக இருக்கும் போதே வெளிச்சமாக இருக்கும் தன்மை கொண்டது. அதன்பின் இது லார்வாவாக இருக்கும் போது கூட வெளிச்சத்தை வெளிப்படுத்தும். தங்களை மற்ற பூச்சிகள் கடிக்காமல் இருக்க.. எதிரிகளை பயமுறுத்தும் விதமாக இந்த வெளிச்சத்தை பயன்படுத்திக்கொள்ளும். அதாவது ஆபத்தை லைட் போட்டு விரட்டும் இந்த மின்மினி பூச்சிகள். பொதுவாக ஈரப்பதமான இடங்களில் வளரும் இந்த மின்மினி பூச்சி லார்வாக்கள் அங்கே இருக்கும் சிறு சிறு புழு, பூச்சிகளை தின்று வளரும், என்கிறார் வைட் இணை நிறுவனர் முரளி.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

சரியாக ஒரு வருடம் கழித்து இந்த மின்மினி பூச்சிகள் முழுமையாக வளர்ந்து பறக்க தொடங்கும். இவை பறக்க தொடங்கியதும்.. அது இணையை தேட தொடங்கும். ஆபத்தில் உதவிய அதே லைட்தான் மின்மினி பூச்சிகளுக்கு காதலின் போதும் உதவுமாம்.

பொதுவாக ஆண் மின்மினி பூச்சிகள் இணையை கண்டுபிடிப்பதற்காக, கவர்வதற்காக தனது பின் பக்கம் ஒளியை ஏற்படுத்தும். இப்படி ஆண் மின்மினி பூச்சிகள் சேர்ந்து எழுப்பும் ஒளி மூலமாகவே அதன் இருப்பிடத்தை பெண்கள் கண்டுபிடித்து, அதனுடன் கூட முடியும்.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

முக்கியமாக பல பூச்சிகள் இருக்கும் காட்டில் ஆண் மின்மினி பூச்சிகளை பெண் மின்மினி பூச்சிகள் எளிதாக கண்டுபிடிக்க இந்த வெளிச்சம் உதவியாக இருக்கும். ஆணும், பெண்ணும் கூடியபின் மீண்டும் பெண் மின்மினி பூச்சிகள் மரத்தில் முட்டைகளை இட்டு அதை வளர்க்க தொடங்கும். இதன் சுழற்சி இப்படியே தொடரும்.

இப்படி தற்போது மனம்பள்ளி காட்டில் ஆண் மின்மினி பூச்சிகள் ஒன்றாக சேர்ந்து எழுப்பும் காதல் " வெளிச்சம் காரணமாகவே அங்கே ரம்மியமான காட்சிகள் அரங்கேறி உள்ளன. பொதுவாக எல்லா எரியக்கூடிய விளக்கும் ஒரு வித வெப்பத்தை வெளிப்படுத்தும். ஆனால் மினிமினி பூச்சிகள் ஏற்படுத்தும் இந்த வெளிச்சம் காட்டில் எந்த விதமான வெப்பத்தையும் ஏற்படுத்தாது. மினிமினிகளின் உடலும் வெப்பம் அடையாது. இதை bioluminescence என்று அழைப்பார்கள்.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

வைட் அமைப்பு: 2022ல் உருவாக்கப்பட்ட வைட் அமைப்பு மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் ஆனைமலை தொடர் மின்மினி பூச்சிகள் அதிகம் இருக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. மதி துமிலன், ஸ்ரீதர் போன்ற வைட் நிறுவன இணை நிறுவனர்களும் இங்கே மின்மினி பூச்சிகள் குறித்து தொடர் ஆய்வுகளை செய்து, மனிதர்கள் பயன்படுத்தும் விளக்குகளால் ஏற்படும் அபாயம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

காட்டோரங்களில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள், ஹை பீம் வாகனங்கள் பயன்படுத்தும் செயற்கை விளக்குகள் காரணமாக மின்மினி பூச்சிகள் இணையை கண்டுபிடிக்க முடியாமல் குழம்பும் நிகழ்வுகளும், இதனால் மின்மினி பூச்சிகள் எண்ணிக்கை குறைவதும் சமீப காலமாக நடந்து வருகின்றது. இதனால் மின்மினி பூச்சிகள் உண்டு வாழும் கொடூர பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி, காட்டின் சமநிலையை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

Why Firefiles are luminating with synchronization in Aanai Malai forest? See the mind blowing pictures

பொதுவாக மின்மினி பூச்சிகள் 5-10 பூச்சிகளை தினமும் உண்ண கூடியவை. மின்மினி பூச்சிகள் எண்ணிக்கை பாதிக்கப்பட்டால் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகி.. சுற்றுசூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது மின்மினி பூச்சிகள் மின் விளக்குகள் காரணமாக எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றன என்ற ஆய்வை அதன் டிஎன்ஏ மூலம் மேற்கொண்டு வருகின்றனர் வைட் நிர்வாகிகள்.

பொதுவாக மின்மினி பூச்சிகள் அதிக அளவில் இப்படி ஒன்றாக கூடி ஒளி எழுப்புவது ஆனைமலை காட்டில் அடிக்கடி நடக்கிறது. இது இந்தியாவில் வேறு எங்கும் நடப்பது இல்லை. இதன் அர்த்தம்.. ஆனைமலை காடு ஒளி மாசுபாடு காரணமாக பெரிதாக இன்னும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+